17-வது மக்களவையின் எம்.பி.க்கள் யார்? யார்?- ஜனாதிபதியிடம் பட்டியலை ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்!

Loksabha election, EC submitted new list of MPs to president Ramnath Govind

by Nagaraj, May 25, 2019, 14:54 PM IST

நடந்து முடிந்த17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், தலைமை தேர்தல் ஆணையம் முறைப்படி சமர்ப்பித்துள்ளது.


நாட்டின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி வெளியிட்டது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதியைத் தவிர்த்து 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.கடந்த 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளின் படி மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது.


இந்நிலையில் இரண்டரை மாதகால தேர்தல் நடவடிக்கைகளை முடித்துள்ள தேர்தல் ஆணையம் , புதிய எம்.பி.க்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 542 புதிய எம்.பி.க்களின் பெயர் விபரங்களுடன் கூடிய பட்டியலை முறைப்படி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்தார்.




You'r reading 17-வது மக்களவையின் எம்.பி.க்கள் யார்? யார்?- ஜனாதிபதியிடம் பட்டியலை ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை