ஆண் பக்தர்களை மட்டும் குறி வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்..! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..

by Logeswari, Nov 10, 2020, 12:25 PM IST

வேலூர் மாவட்டத்தில் பக்கதர்களின் பணத்தை மோசடி செய்ததாகவும் மற்றும் ஆண்களுக்கு பாலியல் தொல்லை செய்ததாக சாமியாரை போலீஸ் கைது செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்த குமார். இவர் ஆன்மிகத்தில் சேர்ந்ததில் இருந்து தனது பெயரை சாந்தா சுவாமிகள் என்று மாற்றி கொண்டார். இவர் சில நாட்களுக்கு முன்பு சமுதாயத்தில் பல முக்கிய புள்ளிடம் 65 லட்சம் வரை பணம் வாங்கி மோசடி செய்ததாக சாமியார் மீது புகார் அளித்தனர். அதன் பெயரில் சாந்தா சுவாமிகளை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டார். தன்னிடம் வரும் பணக்கார ஆண்களை தேனொழுக பேசி மயக்கி பெங்களூரில் உள்ள தனது நண்பர் கமலக்கார ரெட்டியிடம் பணத்தை முதலீடு செய்ய சொல்லி 65 வரை கொள்ளை அடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் அவரை தேடி வருகின்ற ஆண் பக்தர்களை முகநூலில் தொடர்பு கொண்டு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கு பாசிட்டிவாக பதில் சொல்லுபவர்களுடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார். இதனால் பல ஆண்களை பாலியல் தொல்லை செய்துள்ளார். இவர் ஆன்மிகத்தில் சேருவதற்கு முன்பு அரசாங்க பணியில் இருந்துள்ளார்.அதன் பின் கடவுளுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இவர் தமிழக முக்கிய அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்து இவரது நண்பரான கமலக்கார ரெட்டியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இது போல போலி சாமியார்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை