பேருந்து சரிந்து மின்கம்பியில் உரசியது : நான்கு பயணிகள் உயிரிழப்பு

Advertisement

தஞ்சை அருகே தனியார் பேருந்து மீது சாலையோரம் இருந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வரகூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு சில மீட்டர் தூரம் சென்ற போது, திருக்காட்டுப்பள்ளியை நோக்கி எதிரே வந்த லாரிக்கு சாலையில் இடம் கொடுத்து பேருந்து சாலையில் இடதுபுறம் ஒதுங்கியுள்ளது.

சாலை விரிவு படுத்துவதற்காக பணிகள் நடைபெறுவதால் சாலையோரம் சகதியில் பேருந்து சிக்கி லேசாக சரிந்தத்து. அந்த இசத்த்து சென்ற உயரழுத்த மின்சார கம்பி பேருந்து மீது உரசியதில் மின்சாரம் தாக்கி பேருந்தில் பயணம் செய்த கவிதா, நடராஜன், கல்யாணராமன் மற்றும் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . மேலும் 3 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

READ MORE ABOUT :

/body>