அ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன? ..

அ.தி.மு.கவில் போட்டியிட வாய்ப்பு கோரி, 15 ஆயிரம் பணம் கட்டி விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணலில் என்ன நடந்தது என்ன சொன்னார்கள் என்பதை விவரிக்கிறார் நேர்காணலில் பங்கேற்க ரத்தத்தின் ரத்தம் ஒருவர். முதலில் பேட்ச் பேட்சாக தலைமை அலுவலகமாடிக்கு அனுப்புறாங்க. 6 மாவட்டங்களுக்கு ஒரு பிரிவு இந்த ரீதியில் உள்ளே அனுமதிக்கப்பட்டாங்க. ஒரு பேட்சில் 800 முதல் 1000 பேர் வரை இருக்கிறாங்க.
ஆனா அந்த ரோமி போதுமான அளவுக்கு சேர்கள் இல்லை. அதனால் அமர்ந்தவர்கள் போக மற்றவர்கள் நெருக்கி அடித்து நிக்க வேண்டியதாயிற்று. அப்படி வந்தவங்க முன்னாடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி.வேணுகோபால் ஆகிய ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் இருந்தாங்க. கே.பி.முனுசாமி வரவேற்று ஒரு நிமிடம் பேசினாரு.

அப்புறம் முதல்வர் இ.பி.எஸ் ரெண்டு நிமிஷம் பேசினார்.புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக பேசிய ஒ.பி.எஸ்சும் ரெண்டு நிமிஷம் தான் பேசினார். விருப்ப மனு அளித்த உங்கள் எல்லோரையும் தனித்தனியே சந்திக்கத்தான் விருப்பம். ஆனால் அதற்கு நேரமில்லை. எனவே தனித் தனியாக சந்திக்க முடியாததற்கு வருந்து கிறோம். ஒரு தொகுதிக்கு பலர் மனு அளித்திருந்தாலும், ஒருவருக்குதானே வாப்பளிக்க முடியும். ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை அம்மாவின் பாதங்களில் சமர்ப்பிப்போம் என்றார்.ஓ.பி.எஸ் பேசி முடித்ததும், 7 பேரும் ஒன்றாக அறைக்குள் சென்று விட்டனர்.

சீட் கிடைக்க வில்லை என்றாலும் தங்கள் குறைகளை மனுவாக எடுத்து வந்தவர்கள் அதைக் கூட தலைவர்களிடம் கொடுக்க முடியாதபடி தலைமைக் கழக நிர்வாகிகள், அத்தனை பேரையும் அப்படியே பின் வாசல் வழியாக கீழே இறக்கி விட்டுட்டாங்க. அதன் பின் அடுத்த 6 மாவட்ட பிரதிநிதிகள் அழைக்கப்படுகிறார்கள். மறுபடி அதே காட்சி.அதே டயலாக்.. அதே வழியனுப்பு படலம்.. ஒரே நாளில் 8,000 பேரிடம் நேர்காணல் நடத்த வேண்டும் என்றால் அப்படித்தானே இருக்கும். இதுதான் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்ட விதம்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :