தேமுதிக கதை க்ளோஸ்…! தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…!

by Ari, May 3, 2021, 11:21 AM IST

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என கூறி வெளியேறிய தேமுதிகா, அவசர கோலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது, அதில் விஜயகாந்த் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதியான விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் அம்முக அதரவுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா களமிறங்கினார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர் ராதாகிருஷ்ணன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரேமலதா விஜயகாந்த் மொத்தம் 25 ஆயிரத்து 908 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்த தேமுதிக இந்தநிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை அடுத்து, மைத்துனர், மனைவி, மகன் என கட்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பலர் கட்சியை விட்டு அடுத்தடுத்து வெளியேறியதால் ஒரு கட்டத்தில் கட்சி வலுமை இழந்தது.

பாஜகவுடன் அதிக நெருக்கம், அதிமுக கொண்டு வரும் திட்டங்களை கண் மூடிக்கொண்டு ஆதரிப்பது என தேமுதிகவின் செயல்பாடுகளால் அக்கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

இந்நிலையில், கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் பிரேமலதா விஜயகாந்த், விருதாச்சலத்தில் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலோடு தேமுதிகவின் கதை முடிகிறது என பல கட்சிகள் கூறியதுபோல் ஆகிவிட்டதாக அக்கட்சி தொண்டர்களை கவலையில் உள்ளனர்.

You'r reading தேமுதிக கதை க்ளோஸ்…! தேமுதிக வீழ்ச்சிக்கு இதான் காரணம்…! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை