திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சரியான நேரம்

Which time is good for Girivalam in Tiruvannamalai

by Vijayarevathy N, Oct 23, 2018, 19:04 PM IST

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு கிரிவலம் சென்றால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில்  கிரிவலம் செய்கின்றனர்.

நாளை புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனை தரிசித்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.

 இந்நிலையில், புரட்டாசி மாத பௌர்ணமி திங்கள்கிழமை (செப்டம்பர் 24) காலை 7.41 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25) காலை 8.42 மணிக்கு முடிவடைகிறது.

You'r reading திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சரியான நேரம் Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை