பொருளாதார தடை விதிக்க முடிவு -10 பில்லியன் டாலர் நிதி நெருக்கடி சிக்கலில் பாகிஸ்தான்

Pakistan could be blacklisted by the Financial Action Task Force

by Suganya P, Apr 3, 2019, 11:55 AM IST

தீவிரவாதிகளுக்கு நீதி உதவியை பாகிஸ்தான் வழங்கியது உறுதி செய்யப்பட்டதால்  அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க சர்வதேச நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.

பாரீஸில், FATF எனப்படும் சர்வதேச நிதி அமைப்பில், தடை செய்யப்பட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதி அமைப்பைச் சேர்ந்த குழுவினர் சமீபத்தில் பாகிஸ்தானுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் நிதி அளிப்பதை உறுதி செய்தது. ஆகையால், தடை செய்யப்பட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்க FATF முடிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக, ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்  நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் நெருக்கத்தாலே சர்வதேச நிதி அமைப்பு பாகிஸ்தானைத் தடை செய்யப்பட நாடுகள் பட்டியலில் இணைத்துள்ளதாக அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றம்சாட்டுகிறார். ஆனால், தீவிரவாதத்திற்கு எதிரான நிதிக் குற்றத்தில் பாக்., அரசு செயல்பட்டதால், தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட உள்ளது என்ற  தகவலைச்  சர்வதேச நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது.   

You'r reading பொருளாதார தடை விதிக்க முடிவு -10 பில்லியன் டாலர் நிதி நெருக்கடி சிக்கலில் பாகிஸ்தான் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை