Aug 14, 2019, 12:23 PM IST
காஞ்சிபுரத்திற்கு நேற்று நள்ளிரவில் தனது மனைவி லதாவுடன் வருகை தந்த ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசித்தார். அத்திவரதர் தரிசனம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். Read More