Jul 18, 2019, 21:18 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடைபெறும் வரை பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More