May 26, 2019, 10:58 AM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தாலும், டெல்லி பாஜக வட்டாரத்தில் அக்கட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உற்று நோக்க வைத்துள்ளது. அதிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிமுகவினரிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Read More