10 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்தது உறுதியாகியுள்ளதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த சத்ய பிரதா சாகு பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஓரிரு நாட்களில் மறு ஓட்டுப்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More


10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு?-தமிழக தேர்தல் ஆணையம்

தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில்  மறுவாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. Read More


தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த அரசு அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார் Read More


சோளிங்கர்,குடியாத்தம் தேர்தலை ரத்து செய்ய அதிமுக பிளான்... துரைமுருகன் வளைக்கப்பட்ட பகீர் பின்னணி!

திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை  தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை  வேட்பாளர் ஆக்கியது. வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர். Read More


'பாலாகோட் விமானப் படை தாக்குதல்; பிரதமர் மோடியின் பேச்சு விதிமீறல் தான்' - தேர்தல் அதிகாரி அறிக்கையால் பரபரப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தானில் இந்திய விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது போன்றவற்றை குறிப்பிட்டுப் பேசியதில் தேர்தல் விதிமுறையை மீறியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பியுள்ளார். Read More


தேர்தலில் விரலில் மை வைக்க மட்டும் ரூ.2 கோடி செலவாம்- தேர்தல் அதிகாரி...

தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக வாக்காளர்களின் விரலில் அடையளாமாக வைக்கப்படும் அழியாத மை ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார் Read More


துரைமுருகன் ஆட்களிடம் பிடிபட்டது எத்தனை கோடி? - தேர்தல் அதிகாரி விளக்கம்

வேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More


தேர்தல் நாளில் ஐ.டி. ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தேர்தல் நாளன்று ஐ.டி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More


ஏப்ரல் 9-ந்தேதி மாலை வரை தான் தேர்தல் கருத்துக்கணிப்பு, மே19 வரை கூடாது - தமிழக தேர்தல் அதிகாரி

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் மே மாதம் 19-ந் தேதி மாலை வரை வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More


'கையை' வெட்டுவீர்களா... 'சூரியனை' மறைப்பீர்களா.. கொந்தளித்த தமிழிசை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை வடிவிலான கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொந்தளித்துள்ளார். கைச்சின்னம் என்பதற்காக உடம்பிலிருந்து கையை வெட்ட முடியுமா? தினமும் உதிக்கும் சூரியனை மறைப்பீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை. Read More