World-Cup-cricket-Pakistan-TV-advt-on-mocks-IAF-pilot-Abhinandan

'உலகக்கோப்பையும்.. டீ..கப்பும்' அபிநந்தனை சித்தரித்து பாக்.சர்ச்சை விளம்பரம் ... இந்திய ரசிகர்கள் ஆவேசம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் வெளியாகி வரும் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிய போது, அவர் டீ குடிக்கும் காட்சியை வைத்து கிண்டலாகவும், மலிவாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது

Jun 12, 2019, 11:06 AM IST