சிம்பு என்கிற எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் தொடர்ந்து இணைந்து நடிகர் பட்டாளத்தால் ரசிகர்களிடத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகரின் வாரிசு இணைந்து நடிக்கிறார்.