பத்து தல சிம்புவுடன் இணையும் நடிகரின் வாரிசு.. கொரோனா அச்சத்தால் தள்ளிப்போன படம்..

by Chandru, Dec 24, 2020, 12:33 PM IST

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகரின் வாரிசு இணைந்து நடிக்கிறார். அதுபற்றிய விவரம்:ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்கும் “சில்லுனு ஒரு காதல், நெடுஞ் சாலை” புகழ் ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் எஸ் டி ஆர் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் இணைந்து நவரச நடிகர் கார்த்திக் மகனும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவருமான கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படத்துக்கு “பத்து தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றிப் படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப் பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்ட படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா அவர்களும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞான வேல் ராஜாவும் திரையுலகில் ஒன்றாகப் பயணத்தை தொடங்கியவர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பது இருவருக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

இது குறித்து கே.ஈ.ஞானவேல் ராஜா கூறியதாவது:ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் பிரமாண்ட இப்படத்தை அறிவிப்பது பெருமையாக உள்ளது. எஸ் டி ஆர் அதீதமான சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக அவர் வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாபாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பைத் தேடினோம். பல்வேறு பெயர்களைப் பரிசீலித்த பின்னால் “பத்து தல” தலைப்பு உறுதி செய்யப்பட்டது. ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தைப் படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள். கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். எங்களைப் பொறுத்தவரையில் அவர் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். “பத்து தல” படத்தில் அவரது பாத்திரம் வெகு கனமானது. அவரது திரை வாழ்வில் இப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரைப் பெற்றுத்தரும் படமாக இருக்கும். எனது முதல் தயாரிப்பான “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தை இயக்கிய காலத்திலிருந்து, இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா அவர்களும் நானும் பல்லாண்டுகளாக நல்லதொரு நட்புறவினை பேணி வருகிறோம். திரையுலகின் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் மேலும் பல ஆச்சரியங்களும் இணையவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.

இதற்கிடையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் காட்டேரி 25ம் தேதி வெளியாகவிருந்தது. அது திடீரென தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத் தன்மையை கருதிக் கொண்டும். இத்திரைப்படத்தில் பணி யாற்றிய பல்வேறு தொழில் நுட்பக்கலைணர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25ம் தேதி வெளிவர இருக்கும் காட்டேரி திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading பத்து தல சிம்புவுடன் இணையும் நடிகரின் வாரிசு.. கொரோனா அச்சத்தால் தள்ளிப்போன படம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை