நடிகர் சிம்பு சில காலம் இணையதள டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகி இருந்தார்.ஆனாலும் அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக சிம்புவின் தகவல்களைத் பகிர்ந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தின் ஊரடங்கு தளர்வில் சிம்பு மீண்டும் தந்து டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார்.
நடிகர் சிம்பு சமீபகாலமாக அடிக்கடி கோவில் கோவிலாக சென்று வழிபடுகிறார். சில மாதங்களுக்கு முன் ஐயப்பன் சாமிக்கு விரதம் இருந்து சபரிமலை சென்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட வேறு சில முக்கிய கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டார்.
கொரோனா ஊரடங்கின் போது சிலம்பரசன் கடுமையான பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டு தனது உடல் எடையை குறைத்தார்.
இயக்குனர் வெங்கட் பிரபு பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் வல்லவர். சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சரோஜா, என அவரின் படங்கள் பேசப்பட்டன. தற்போது சிம்புவுடன் அரசியல் த்ரில்லராக மாநாடு படம் இயக்குகிறார்.
சமீபாகாலமாக பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் பிரபல ஹீரோக்கள் படங்கள் ஒரு மொழியில் அல்லாமல் பல மொழிகளில் உருவாக்கப்படுகிறது.
நடிகர் சிம்புவுக்கு இன்று பிப்ரவரி 3ம் தேதி பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பிறந்த வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கினார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்தார்.
நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி திரைக்கு வந்தது. 28 நாட்களில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுசீந்திரன் நடத்தி முடித்தார்.
பொங்கல் தினத்தில் ஈஸ்வரன் படம் வெளியாகி லாபகரமான வெற்றியை பெற்றது. அடுத்து சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார்.
கோலிவுட்டில் அந்தகாலம் தொட்டு இந்த காலம்வரை இரண்டு ஹீரோக்களுக்கிடையே போட்டி நிலவுவது நடந்து வருகிறது. எம்ஜிஆர்- சிவாஜி, ஜெயசங்கர்- ரவிச் சந்திரன், ரஜினிகாந்த்- கமல்ஹாசன், விஜயாகந்த்-சரத்குமார், விஜய்-அஜீத் இப்படி தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி நிகழ்வதுண்டு.