கொரோனா ஊரடங்கின் போது சிலம்பரசன் கடுமையான பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டு தனது உடல் எடையை குறைத்தார். அதன்பிறகு அவரது செயல் பாடுகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. சுசீந்திரன் இயக்கத்தில் 28 நாளில் ஈஸ்வரன் படத்தை முடித்துக் கொண்டுத்தார், அப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வந்தது. மேலும் பிரபல இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டி ருக்கிறார். சிம்பு விரைவில் கவுதம் மேனனுடன் இணைகிறார். ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்த சிம்பு தற்போது மூன்றாவது முறையாக கவுதம் மேனனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது த்ரிஷா அல்லது நயன்தாரா இருவரில் ஒருவர் சிம்புவுடன் ஜோடி சேர்வார் என்று கூறப்படுகிறது. சிம்பு மற்றும் கவுதம் மேனனின் படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவிடம் கேட்டிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே வல்லவன் , இது நம்ம ஆளு படங்களில் நயன்தாரா நடித்தி ருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைவாரா என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. இந்த வாய்ப்பை அவர் நிராகரித்தால் த்ரிஷா மீண்டும் இணைவார் என்று தெரிகிறது. மேலும் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மேலும், இந்த படம் அவர்களின் முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்காது என்பதை கவுதம் மேனன் முன்பு ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். கவுதம் மேனனுடன் சிம்புவின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இப்படத்தை ஐசரி கே கணேஷின் வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கு 'மாநாடு' படத்திற்குப் பிறகு 'பத்து தலா' படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் சிம்பு. கவுதம் மேனனுடன் சிம்பு தனது படத்தைத் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.