கவுதம் மேனனுடன் இணையும் சிம்பு.. அட்வான்ஸ் வாங்கியாச்சி..

Advertisement

பொங்கல் தினத்தில் ஈஸ்வரன் படம் வெளியாகி லாபகரமான வெற்றியை பெற்றது. அடுத்து சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்துக்காக அவருக்கு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்தார். சிம்பு நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது. அதன்பிறகு அவர் ஒன்றரை வருடமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா ஊடங்கில் தனது உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டார். பயிற்சியாளர் வழிகாட்டுதல்படி உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு 30 கிலோ எடை குறைத்து ஒல்லி தோற்றத்துக்கு மாறினார். ஊரடங்கின்போது கதைகள் கேட்டு வந்த சிம்பு. இயக்குனர் சுசீந்திரன் சொன்ன கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். புதிய தோற்றத்துடன் அப்படத்தில் நடித்தார். ஈஸ்வரன் என பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்தது, தொடர்ந்து 28 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சிம்பு நடித்த படத்தை முடித்துக் கொடுத்தார். இப்படம் பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆனது. முன்னதாக இப்படம் வெளியிடகூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் போர்க் கொடி உயர்த்தினார். அவரிடம் பேசி பின்னர் திட்டமிட்டபடி ஈஸ்வரன் படம் வெளியானது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு வந்ததால் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புகள் தொடங்கியவுடன் ஈஸ்வரன் படப்பிடிப்பில் சிம்பு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டதை திரையுலகினர் பாராட்டினர். திரையுலகினரால் பாராட்டு பெற்ற சிம்புவுக்கு அவரது தாயார் சொகுசு கார் வாங்கி பரிசளித்தார். அடுத்து சிம்பு நடிக்கும் மாநாடு படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டில் சிம்பு நடிப்பில் 3 படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈஸ்வரன் படத்தை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

கவுதம் மேன்ன படத்தில் நடிக்க தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். தேவி, மூக்குக்குத்தி அம்மன் போன்ற பல படங்களை தயாரித்தளித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். அதற்கான அடவான்ஸ் நேரில் சந்தித்து தந்தார். கவுதம் மேனன் இயக்க உள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன், சிம்பு கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் 3வது முறைக்காக இந்த கூட்டணி இணைகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புவுடன் இணைந்து உருவாக்கப்போவதாக கவுதம்மேனன் தெரிவித்திருந்தார். தற்போது அந்த படம் உருவாகுமா அல்லது வேறு படமா என்பது பற்றி விரைவில் விவரம் தெரியவரும். கொரோனா லாக்டவுனில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படம் உருவானது. மூவரும் அவரவர் வீட்டிலுருந்தபடியே இந்த குறும்படத்தில் பணியாற்றினார்கள். அப்படம் நெட்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது சிம்புவை வைத்து முழு நீள படம் இயக்குகிறார் கவுதம் மேனன்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>