சிம்பு-தனுஷ் மோதல் மீண்டும் தொடக்கம்.. அசுரனா? ஈஸ்வரனா?

Advertisement

கோலிவுட்டில் அந்தகாலம் தொட்டு இந்த காலம்வரை இரண்டு ஹீரோக்களுக்கிடையே போட்டி நிலவுவது நடந்து வருகிறது. எம்ஜிஆர்- சிவாஜி, ஜெயசங்கர்- ரவிச் சந்திரன், ரஜினிகாந்த்- கமல்ஹாசன், விஜயாகந்த்-சரத்குமார், விஜய்-அஜீத் இப்படி தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி நிகழ்வதுண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக வலம் வருகின்றனர். இடையில் இவர்களுக்காக மோதிக் கொள்பவர்கள் அவரவர்களின் ரசிகர்கள் மட்டுமே.

போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கி படத்தில் இடம் பெறும் வசனம் வரை உன்னிப்பாக கவனித்து அதற்குப் பதிலடி தருவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சீனியர் ஹீரோக்கள் அரசியல் என்று சென்று விட்டதால் தற்போது விஜய்- அஜீத், சிம்பு -தனுஷ் ரசிகர்களுக்கிடையே மோதல் நடக்கிறது. சில சமயம் இந்த மோதல் நெட்டை தெறிக்க விடும் அளவுக்குச் சூடு பறக்க நடக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் பட வசனம் தனுஷ் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஈஸ்வரன் படத்தில் சிம்பு ஒரு மோதல் காட்சியில். நீ அழிக்க வந்த அசுரன் என்றால் நான் காக்க வந்த ஈஸ்வரன் என்று வசனம் பேசுவார். நடிகர் தனுஷ் நடித்த படம் அசுரன். இதனால் அசுரன் என்று சிம்பு தனுஷைத்தான் குறிப்பிடுகிறார் என்று தனுஷ் ரசிகர்கள் ஆவேசம் அடைந்து சிம்புவையும் ஈஸ்வரன் படம் பற்றியும் விமர்சித்து வருகின்றனர். அதற்குச் சிம்பு ரசிகர்கள் பதிலடி தந்து வருகின்றனர். இதுகுறித்து இதுவரை மவுனம் காத்து வந்த தனுஷ் தற்போது சிம்புவுக்கு பதில் அளிப்பது போல் தனது டிவிட்டரில் பயோவை மாற்றி அசுரன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.தனுஷ் மற்றும் சிம்பு கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள். பெரும் ரசிகர்களையும் கொண்டுள்ளனர். இரண்டு நடிகர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் இடையிலான போட்டி புதியதல்ல. நடிகர்கள் மேடையில் தங்களுக்கு இடையே எந்த போட்டியையும் மறுத்தாலும், அவர்களது ரசிகர்களிடையே எப்போதுமே ஏதோ ஒரு வகையில் இந்த மோதல் தொடர்கிறது.

இதுகுறித்து செல்வராகவன் குறிப்பிடும்போது தனுஷ் அழுத்தமான நடிப்பு அசுரனில் வெளிப்பட்டது.அந்த ஞாபகமாக அவர் பயோவில் அசுரன் என மாற்றியிருக்கலாம் எனத் தெரிவித்தார், ஆனால் இதுகுறித்து தனுஷ் தரப்பிலிருந்து வேறு விளக்கம் எதுவும் தரப்படவில்லை. தற்போது சிம்பு, தனுஷ் ரசிகர்களுக்கு நெட்டில் மோதல் தொடங்கி உள்ளது. தனுஷ் நடிப்பில் அடுத்த ஜெகமே தந்திரம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், தீபக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு வசனம் முலம் தனுஷ் பதில் அளிப்பரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>