என் படத்தை ஹாலிவுட் படத்தோட ஒப்பிடாதீங்க.. இயக்குனர் திடீர் கோபம்..

by Chandru, Feb 9, 2021, 10:40 AM IST

இயக்குனர் வெங்கட் பிரபு பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் வல்லவர். சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சரோஜா, என அவரின் படங்கள் பேசப்பட்டன. தற்போது சிம்புவுடன் அரசியல் த்ரில்லராக மாநாடு படம் இயக்குகிறார். இப்பட டீஸர் கடந்த வாரம் சிம்புவின் 38 வது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது, இது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்றது.இந்நிலையில் சிலர் மாநாடு படத்தை ஹாலிவுட் படத்துடன் ஒப்பிட்டனர். கிறிஸ்டோபர் நோலனின் ஹாலிவுட் த்ரில்லர் படம் 'டெனெட்'. அதனுடன் மாநாடு படத்தை ஒப்பிட்டு இது டெனெட் படம் போல உள்ளதாக குறிப்பிட்டன.

'டெனெட்' உடன் 'மாநாடு' ஒப்பீடு பற்றித் வெங்கட் பிரபு பதில் அளித்தார். அவர் அளித்த பேட்டியில், 'மாநாடு' டீஸரை 'டெனெட்' உடன் ஒப்பிடுகிறார்கள். அது பெருமையாக உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, டெனெட் படத்துக்கும் மாநாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 'டெனெட்' எனக்கு புரியவில்லை. 'மாநாடு' படத்தை வேறு படத்துடன் ஒப்பிடத் தொடங்குவதால் ரசிகர்கள் டிரெய்லருக்காக காத்திருங்கள். அப்போது இன்னும் வேறு படங்களுடன் ஒப்பிடுவார்கள் என்றார்.

ஷங்கர், கவுதம் மேனன், மணிரத்னம், மிஷ்கின், வெங்கட்பிரபு, அட்லி போன்றவர்களின் படங்கள் வெளியாகும்போது அந்த படங்கள் ஹாலிவுட் அல்லது ஈரானிய படங்களுடன் ஒப்பிடப்படுவதுடன் அந்த படத்தின் பிரதிபலிப்பு இருப்பதாக ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் கருத்து பகிர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சிம்பு நடிக்கும் 'மாநாடு' படப்பிடிப்பின் இறுதிக் கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. விரைவில் படம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு ஒரு முஸ்லீம் இளைஞனாக நடிக்கிறார், கல்யாணி பிரியதர்ஷன் அவரது ஜோடியாக நடிக்கிறார். அரசியல் த்ரில்லரான இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, அமரன், மனோஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் கையாள்கிறார்.

You'r reading என் படத்தை ஹாலிவுட் படத்தோட ஒப்பிடாதீங்க.. இயக்குனர் திடீர் கோபம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை