சிம்புவின் மாநாடு படப்பிடிப்பை நிறுத்த முயற்சி.. பெப்ஸிக்கு நோட்டீஸால் பரபரப்பு..

Advertisement

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கினார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்தார். முன்னதாக இப்படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என போர்க்கொடி உயர்த்தினார் மைக்கேல் ராயப்பன். தான் தயாரித்த அன்பானவன் அஞ்சாதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு நடித்தார். அவரால் நஷ்டம் ஏற்பட்டது. நஷ்ட ஈடு தராமல் ஈஸ்வரன் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். சங்கம் சார்பில் கியூப் நிறுவனத்துக்கு தகவல் அளித்த படத்தை வெளியிடாமல் நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிறகு நடந்த பேச்சு வார்த்தையில் ஈஸ்வரன் பட தயாரிப்பாளர் கலந்துகொண்டார். அதன் பிறகு படம் வெளியானது. ஆனால் பிரச்னை தீர்ந்த பாடில்லை. சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து வந்தது.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 6ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் மாநாடு படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று பெப்சி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இந்த நோட்டிஸை பெப்ஸிக்கு அனுப்பி உள்ளனர். மைக்கேல் ராயப்பன் - சிம்பு பிரச்னையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம். ஆனால் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் நிர்வாக பொறுப்பிலும் உள்ளதால் அவருக்கு ஆதரவாக நடப்பு தயாரிப்பு சங்கம் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கம், தமிழ்நாடு மூவி மேக்கர் சங்கம் ஆகிய 3 தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக நடந்த பேச்சு வார்த்தையின்போது சிம்பு நஷ்ட ஈடு தருவதாக கூறியிருக்கிறாராம் ஆனால் எவ்வளவு தருவேன் என்று கூறவில்லை என்று தெரிகிறது. அவரிடமிருந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பணத்தை வாங்கிதருவதாக கூறி இருக்கிறார்களாம். இந்த பேச்சு வார்த்தையில் நடிகர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் யாரும் இல்லாததால் சரத் குமாரை பேச தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்க தலைவர் உஷா ராஜேந்தர் அழைத்திருக்கிறாராம். எனவே இந்த பேச்சு வார்த்தையில் சரத்குமாரும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>