சூர்யாவை தொடர்ந்து ஒடிடிக்கு போன மற்றொரு ஹீரோ..

Advertisement

கொரோனா வைரஸ் பீதி கொஞ்சம் விலகி மீண்டும் இயல்பு வாழ்க்கை மக்கள் மத்தியிலும் திரையுல்கினரிடமும் திரும்பி வந்துக்கொண்டிருக்கும் நிலையில் 2வது கொரோனா அலை என்ற விவகாரம் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கொரோனா ஊராடங்கில் திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடிக்கிடந்தன. இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியது. இந்த நிலையில் திரைக்கு வர தயாராக இருந்த படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், நயந்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெயில் போன்ற படங்கள் வெளிவந்தன. தியேட்டர் திறப்புக்காக காத்திருந்த சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் இறுதியாக ஒடிடி தளத்தில் வெளியானது. அதர்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சூர்யாவுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இட்டையே வார்த்தை போர் நடந்தது.

ஒடிடி தளத்தில் சூரரைப்போற்று வெளியானதால அந்த நிறுவன் தயாரிக்கும் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்தனர். 7 மாதமாக மூடிக்கிடந்த தியேட்டர்கள் கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக திறக்க அரசு அனுமதி வழங்கியது. 50 சதவீத டிக்கெட் அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர், தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் பரவிய நிலையில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படமும் தியேட்டரில் வெளியாகுமா? ஒடிடி தளத்தில் வெளியாகுமா என்ற ஊசலாட்டம் நிலவி வந்தது. அதுபற்றி பட தரப்பு உறுதி செய்யாமலிருந்த நிலையில் தற்போது பூமி படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து ஹீரோ ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது நீண்ட திரைப்பயணம்‌ முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால்‌ ஆனது.

நீங்கள்‌ அளித்த அளவற்ற அன்பு என்‌ மேல்‌ நீங்கள்‌ வைத்த மிகப்பெரும்‌
நம்பிக்கை, நீங்கள்‌ அளித்த உத்வேகம்‌ தான்‌, சிறப்பான படங்களில்‌ நான்‌ பணியாற்ற காரணம்‌. எனது கடினமான காலங்களில்‌, என்னை உங்களின்‌ சொந்த ரத்தம்‌ போலவேநினைத்து ஆதரவளித்தீர்கள்‌. உங்களின்‌ இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள்‌ இல்லாமல்‌, என்னால்‌ இத்தனை தூரம்‌ வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன்‌. “பூமி” திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌ கல்‌. இப்படம்‌. எனது. திரைப்பயணத்தில்‌ 25 வது படம்‌ என்பதை தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்கமான படம்‌. கோவிட்‌ -19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங்களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களுடன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத்தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக்கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்குகொள்வதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. நிறைய பண்டிகை காலங்களில்‌ திரையரங்கில்‌ வந்து, எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள்‌. இந்த பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ வீட்டில்‌ உங்களை சந்திப்பதை, ஆசிர்வாதமாக கருதுகிறேன்‌. பெரும்‌ அன்புடனும்‌, நிறைய நம்பிக்கையுடனும்‌, என்‌ திரைப்படத்துடன்‌ உங்களை திரையரங்கில்‌ சந்திக்க காத்திருக்கிறேன்‌. கடவுள்‌ நம்மை ஆசிர்வதிக்கட்டும்‌. இவ்வாறு ஜெயம் ரவி கூறி உள்ளார். தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கும் மற்ற படங்களின் நிலை என்ன என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் நாளில் தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>