விடிய விடிய நடைபெற்ற டாஸ்க் .. முதல் இடத்திற்கு போட்டி போடும் ஆரி மற்றும் ரியோ.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?

by Mahadevan CM, Dec 24, 2020, 12:50 PM IST

விடிய விடிய தூங்காமல் பந்தை பிடித்துக் கொண்டிருந்தார்கள். தூங்காமல் ஆடியதற்காக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பந்தை அனுப்பியிருக்கலாம். ஆனால் பிக்பாஸ் டீமோ 2, 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பந்தை அனுப்பி கொண்டிருந்தார்கள். இது பந்து பிடிக்கும் டாஸ்க்கா, இல்லை தூங்காமல் இருக்கும் டாஸ்க்கா என்ற சந்தேகமே வந்தது.

விடிகாலையில் ஒரு முறை பஸ்ஸர் அடித்து பந்து வந்த போது அதை பிடிக்க தவறியது ஆரி அணி. பந்தை பிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையில் ஷிவானியிடம் கோபப்பட்டார் பாலா. அதற்கு ஷிவானியும் எதிர்த்து பேச இருவருக்கும் இடையே விவாதம் நீண்டது. இறுதியில் ஷிவானி அழுது கொண்டே செல்வதில் முடிந்தது.

கிடைக்கும் இடத்தில் எல்லாம், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படுத்து தூங்கி கொண்டிருந்தார்கள்.

காலையில் கிச்சனில் இரண்டு பிரச்சினைகள். துவரம்பருப்புக்கு பதிலாக, கடலைப்பருப்பை தண்ணிரில் ஊற வைத்திருக்கிறார்கள். இதைச் செய்து 2 நாள் வேறு அகிவிட்டது. அதை பாலாவிடம் சுட்டிக் காட்டுகிறார் ஆரி. அதே சமயம் முந்தைய தினம் ஆரி உணவருந்திய தட்டு, மீதமான உணவுடன் கிச்சனில் இருந்ததை, ஆரியை அழைத்து காட்டினார் பாலா. தேவைக்கும் அதிகமான உணவை எடுத்துக் கொடுத்ததாக ரம்யாவின் பெயரில் வழக்கை எழுதினார் ஆரி.

இருந்தாலும் மீதமான உணவை ஆரி குப்பையில் கொட்டுவதை க்ளோசப்பில் காட்டினார்கள். அதாவது இதே போல் ஒரு முறை சனம் உணவை குப்பையில் கொட்டியதை கண்டித்து, அதற்கு சண்டை போட்டு, பிறகு கமல் சார் முன்பு, விவசாயிகள், கஷ்டங்கள், ஏழைகள் பற்றியெல்லாம் பேசிய ஆரி, அதே ஆரி, உணவை குப்பையில் கொட்டி வீணாக்குவதை பாரீர். பாரீர் என்று தெரிந்து கொள்ள அந்த காட்சியை காட்டியிருக்கலாம். ஆனால் இப்போது அந்த தவறை செய்தது ஆரி. எனவே அப்படியான கேள்வியை மறந்து விடுங்கள்.

ஆனால் அந்த கேள்வியை ரம்யா கேட்டார். ஏற்கனவே ஆரி ஆதரவாளர்களால் கடுமையாக, தரக்குறைவாக விமர்சிக்கப்படுகிறார் ரம்யா. இப்போது அது இன்னும் அதிகமாகும்.

பருப்பு வீணானதை பற்றி அனிதாவிடம் கேட்கிறார் பாலா. தன் கேப்டன்சி பற்றி யாரும் எந்தக் குறையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் பாலா. கவனக்குறைவாக துவரம்பருப்புக்கு பதில் கடலைப்பருப்பை தண்ணிரில் போட்டு விட்டதாக சொல்கிறார் அனிதா. அப்போதே சாரி என்று கேட்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் பேசுவது அனிதாவாயிற்றே. கிச்சன் டீமில் இருந்தவர்களிடம் அதை ப்ரிட்ஜில் எடுத்து வைக்கச் சொன்னதாகவும், ஆனால் அதை யாரும் செய்யவில்லை என்றும் மடையை மாற்றினார் அனிதா. அதை கேட்டு பாலாவும் நகர்ந்து விட்டார்.

அனைவரும் டாஸ்கிற்கு தயாராகி கொண்டிருந்த வேளையில் மீண்டும் இந்த பிரச்சினை பேசப்பட்டது. சின்ன விஷயத்தை பெரிதாக்குவதாக அனிதா சொல்லவும், பாலாவும் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த வார கிச்சன் டீம் கேப்டன் அனிதா. ஆரம்பத்தில் இருந்தே அவருடைய வேலைகளில் பாலாவுக்கு அதிருப்தி. கிச்சன் டீமில் இருக்கும் கேப்பியும் சில புகார்களை சொல்லியிருக்கிறார். அப்படியான சமயத்தில் அனிதா மாட்டியவுடன் வச்சு செய்துவிட்டார் பாலா. " நான் கிச்சன் டீம் வந்தாலே இப்படித்தான் செய்யறிங்க" சொன்னதை கெட்டியாக பிடித்துக் கொண்டார் பாலா. உங்களை யாரும் வருந்தி கூப்பிடலை, அப்ப பதவி விலகிக்கோங்க என்று சொன்னவாறு விவாதத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார் பாலா. ஒரு கட்டத்தில் ரம்யா குறுக்கே புகுந்து கிச்சன் டீம் சார்பாக தவறுக்கு மன்னிப்பு கேட்ட உடன் தான் பிரச்சினை முடிந்தது.

இந்த டாஸ்க்கின் 3வது சுற்று ஆரம்பமானது. இதில் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாட வேண்டும். ப்ளாஸ்மா டிவியில் பெயர் வரும் போது, குறிப்பிட்ட நபர் ஓடிச்சென்று பந்தை பிடிக்க வேண்டும். அதற்கு முன் குழுவாக பிடித்த பந்துகளின் பாயிண்ட்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இரு அணிகளும் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொண்டனர்.

ப்ளாஸ்மா டிவியில் பெயர்கள் வர ஆரம்பிக்க ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் விழுந்தடித்து ஓடி பந்த பிடிக்க முயற்சித்தனர். சிலர் கீழே விழவும் செய்தனர். பெயர்களை சொல்வதில் குழப்பம் ஏற்பட்டு சிலர் இரண்டு பந்துகளை பிடித்து விட இறுதியாக வந்தவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது. சோம் தான் அந்த தவறை செய்தார். தனித்தனியாக விளையாடும் போது தான் எந்த சண்டையும் வராமல் இருக்கிறது.

டாஸ்க் முடிந்து அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, "தூங்காதே தம்பி தூங்காதே" பாடல் ஒலித்தது. மீண்டும் அனைவரையும் லிவிங் ஏரியா வரச் சொன்னார் பிக்பாஸ். இது வரை நடந்த போட்டியில் தனித்தனியாக ஸ்கோர் வந்தது. ரியோ, கேப்பி, ரம்யா மூவரும் அதிக பாயிண்ட்ஸ்களை பெற்றிருந்தார்கள். சோம் தவறான பந்துகளை பிடித்ததால் அவருக்கு பாயிண்ட்கள் தரப்படவில்லை. டாஸ்க் ஹைலைட்ஸை ஹவுஸ்மேட்ஸ்களுக்கு போட்டு காண்பிக்கபட்டது. (அன்சீன்ஸ்). அதிலேயே சோமின் தவறு எல்லாருக்கும் தெரிந்தது.

போட்டியின் அடுத்த கட்டமாக இந்த போட்டியில் தனித்தனியாக ஒவ்வொருவரின் பங்களிப்பு, ஈடுபாடு, போட்டியிடும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் 1-9 வரை தரவரிசைப்படி தங்களுக்குள் பேசி வரிசைப்படுத்த வேண்டும். முதல் மூன்று இடங்களை பெறுபவருக்கு இந்த டாஸ்க்கின் அடுத்த சுற்றில் சலுகை வழங்கப்படும். என்னது.... இந்த டாஸ்க் இன்னும் முடியலையா?

லான் ஏரியாவில் அதற்கான செட் போடப்பட்டிருந்தது. ஏற்கனவே இது போன்ற தரவரிசையில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை கண்டிருந்ததால், இந்த முறை அனைவருமே பொறுமையுடன் பேசினார்க்ள். மற்றவர்கள் பேசுவதையும் பொறுமையுடன் கேட்டார்கள். ஒவ்வொருவரும் தனக்கான இடத்தை தேர்வு செய்து, அதற்கான காரணங்களையும் சொன்னார்கள். முதல் ரவுண்ட் சத்தமில்லாமல் முடிந்தது.

குரூப்பாக அமர்ந்து இவ்வளவு நேரம் பேசியும் ஒரு விவாதமும் வரவில்லையே என்று யோசிக்கும் போது ஆரிக்கும்-ரியோவுக்கும் வாக்குவாதம் வந்தது. தனது அணியில் தன்னுடைய பங்களிப்பு, அவர் எடுத்த பாயிண்ட்கள், அவருடைய ஸ்டராட்டஜி, அதில் அவர் வெற்றி பெற்ற விதம் இதை அனைத்தையும் எடுத்துச் சொல்லி முதல் இடத்திற்கு வாதாடினார் ரியோ. பிக்பாஸ் அறிவித்த ஈடுபாடு, பங்களிப்பு, விளையாடிய விதம் இந்த மூன்றையும் சரியாக புரிந்து கொண்டு ரியோ பதிலளித்தார்.

அதற்கு ஆரி பதில் சொல்ல ஆரம்பிக்கும் போதே, ரியோ படுத்து தூங்கியதைச் சொல்லி ஆரம்பித்தது தான் முதல் பிரச்சினை. ஆரியின் வாதத்தில் இதை சொல்லியிருக்க வேண்டியதில்லை. இந்த டாஸ்க் முழுவதும் ஆரி தூங்கவே இல்லை என்பதைச் சொல்ல, ரியோவை உதாரணம் காட்டியிருக்கிறார். அது முதல் தவறு.

ஒட்டுமொத்த போட்டியிலும் தன்னுடைய பங்களிப்பை பற்றி ரியோ பேசிய பிறகு, மீண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரியோவின் தவறை எடுத்து பேச ஆரம்பித்தார் ஆரி. முதலில் பிக்பாஸின் அறிவிப்பை அவர் தவறாக புரிந்து கொண்டு விட்டார். எதிரில் இருப்பவரின் குறைகளை எடுத்துச் சொல்லி ஒவ்வொருவரையும் அந்த இடத்திற்கு வராமல் தடுக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு விட்டார் என்றே நினைக்கிறேன். தொடர்ந்து ரியோவின் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டினார்.

ரியோ தனது தனிப்பட்ட பங்களிப்பை இரு முறை சொல்லிய பிறகும், தனிப்பட்ட பங்களிப்பை பற்றி கேட்ட போது ரியோவே வெறுத்துப் போனார். பிறகு அவர் கேட்ட இன்னொரு கேள்வி, ரியோவின் அணியில் இருந்த பெண்கள் விட்டுக் கொடுத்ததால் தான் ரியோ முண்ணனியில் நின்று பந்தை பிடித்தார் என்று சொன்னார். இது இரு அணிகளுக்குமே பொருந்தும். அணியாக விளையாடும் போது, உடல் வலுவில் வலிமையான ஆண்களை முன்னிறுத்தி விளையாடுவதில் எந்த தவறும் இல்லை. ஆரியின் அணியில் அனிதா, ஆஜித் ஷிவானிக்கும் சமமான வாய்ப்பு தரப்பட்டது. பாலாவின் யோசனையா இல்லை அது ஆரியின் யோசனையா என்று தெரியவில்லை. ஆனால் அந்த யோசனை செயல்படுத்தப்பட்டது. ஆனால் எதிரணியில் பெண்களை முன்னிறுத்தவில்லை. விளையாட்டு தொடங்கிய போது ரியோவும், சோமும் முன்னின்று விளையாடி, ரம்யாவும் கேப்பியும் உதவி செய்ததை, டீம் டாஸ்க் முழுவதும் தொடர்ந்தார்கள்.

ஆரி இதைத்தான் சொல்ல வந்திருக்க வேண்டும். எங்கள் அணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு தரப்பட்டது, ஆனால் உங்கள் அணியில் அப்படி இல்லை என்கிற வாதம் சரியாக இருந்திருக்கும். ஆனால் அதை விடுத்து பெண்கள் விட்டுக்கொடுத்ததால் என்று சொன்னதில் அர்த்தம் மாறிவிட்டது. ஆனாலும் அதை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். ஒருவேளை ஆரி தான் இந்த யோசனையை முன்மொழிந்திருப்பாரானால், அவருடைய ஸ்ட்ராட்டஜியாக, initiativeஆக இதை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து எதிரணியை பற்றி பேசிக்கொண்டே இருந்ததால் அவர் சொல்ல வருவது யாருக்கும் புரியவில்லை. தான் லாஜிக்காக கேட்கும் கேள்விகளுக்கு ரியோவிற்கு பதில் சொல்ல தெரியவில்லை என்று குற்றம் வேறு சாட்டினார். ஒரு அணியாக விளையாடிய பொழுது தனிப்பட்ட ஒருவரின் பங்க்ச்ளிப்பு என்ன? என்பது தான் கேள்வியாக இருக்க முடியும்.

ஆரி தொடர்ந்து தன்னை ஒரு அத்தாரிட்டியாக நிறுவிக் கொண்டே இருக்கிறார். "எனக்கு பதில் சொல்லுங்க நான் விட்டுக் கொடுத்துட்டு போய்டறேன்." நீங்க தகுதியானர்னு தோணுச்சுன்னா, நான் விட்டுக் கொடுத்துடுவேன்" என்று அவர் தான் இறுதி முடிவு எடுப்பவராக காட்டிக் கொள்கிறார். இதை எப்படி எதிர்ப்பது என்று யாருக்கும் தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன்.

நீண்ட நேரம் ஆரி-ரியோவுடைய விவாதம் தொடர்ந்தது. ஏற்கனவே முந்தைய இரவும் தூங்காமல் இருந்த களைப்பு அனைவரின் முகத்திலும் தெரிந்தது. பிறகு விரும்பும் இடத்துக்கு போட்டி போடுவது எனவும், மற்றவர்கள் ஓட்டளித்து முடிவு செய்வது எனவும் மாற்றிக் கொந்டார்கள். இது யாருடைய ஐடியா என்று தெரியவில்லை. அதில் அனைத்தும் சுமூகமாக முடிந்தன.

ரியோ, ரம்யா, சோம், பாலா, ஆரி, அனிதா, ஆஜித், ஷிவானி, கேப்பி என்ற வரிசையில் தேர்வானார்கள். கேப்பிக்கு இறுதி இடம் கிடைத்ததில் உடன்பாடில்லை. ஆனாலும் வேறு வழியில்லை.

இந்த டாஸ்க் முடிந்து உள்ளே வரும் போது மீண்டும் அழைத்த பிக்பாஸ். "தூங்குங்கடா கைப்புள்ளைகளா" என்று சொல்லவும், மொத்த பேரும் மகிழ்ச்சியில் கத்திக் கொண்டு ஓடினர்.

You'r reading விடிய விடிய நடைபெற்ற டாஸ்க் .. முதல் இடத்திற்கு போட்டி போடும் ஆரி மற்றும் ரியோ.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது? Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை