ஆஸ்திரேலியாவில் அபார ஆட்டம் 6 இந்திய புதுமுக வீரர்களுக்கு மஹிந்திராவின் தார் பரிசு

ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி அந்நாட்டு அணியை தோற்கடித்த இந்திய அணியில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்பட 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் அதிரடி பரிசு அறிவித்துள்ளது. Read More


இது முதல்முறை அல்ல, ஆனால் வெற்றி பிரமிப்பானது!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 1996-1997 முதல் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆலன் பார்டர் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10000 ரன்களை கடந்தனர். Read More


பார்டர்- கவாஸ்கர் கோப்பையை நடராஜனுக்கு பரிசளித்த ரகானே

ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றி பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. தொடரை வென்ற பின்னர் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே, உடனடியாக அந்த கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தது அனைவரையும் கவர்ந்துள்ளது. Read More


பிரிஸ்பேனில் இந்தியாவின் முதல் வெற்றி 32 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வி

பிரிஸ்பேன் உள்ள காபா மைதானத்தில் இது இந்தியாவின் முதல் வெற்றியாகும். இந்த மைதானத்தில் 32 வருடங்களுக்கு பின்னர் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.டி 20 கிரிக்கெட் போட்டியை விட இன்று பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது என்றால் அது மிகையல்ல. Read More


இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More


இந்தியா தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுக்கு 183 ரன்கள் வெற்றி பெற இன்னும் 145 ரன்கள் தேவை

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 37 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மிக பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளன. Read More


இந்தியா 1விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் வெற்றி பெற இன்னும் 233 ரன்கள் தேவை

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 41 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்தியா 59 ஓவர்களில் 233 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுடனான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது Read More


ஆஸ்திரேலியாவை அலறவிட்ட சிராஜ்!

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சிராஜ் தனது ஆறாவது இன்னிங்சில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஆடுகளத்தில் நடைபெற்று வருகிறது. Read More


ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளுக்கு 149

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தது. Read More


காயம் ஒரு தொடர்கதை செய்னி 2வது இன்னிங்சில் விளையாடுவாரா? மருத்துவக் குழு தீவிர முயற்சி

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் பாதி பேருக்கு மேல் காயமடைந்துள்ள நிலையில் நேற்று முதலாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னியும் காயமடைந்தார். இதையடுத்து அவர் 2வது இன்னிங்சிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை அடுத்த இன்னிங்சுக்கு தயார்படுத்த மருத்துவக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More