வங்கக் கடலில் தற்போது இலங்கைப் பகுதியில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தமிழ்நாட்டில் வீசிய நிவர் புயலால் மூன்று பேர் உயிரிழந்தனர். ஏறக்குறைய 2,064 மரங்கள் விழுந்தன. 108 மின்சார டிரான்ஸ்பார்மர்களும் 2,927 மின் கம்பங்களும் சேதமுற்றன. தற்போது வங்காள விரி குடாவில் புரவி என்ற புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் நாளை (டிசம்பர் 2) இலங்கையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.