Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More