சல்மான்கான் வழக்கு ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சல்மான்கான் வழக்கை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்து கொண்டிருந்த போது சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும்  வழக்கு தொடரப்பட்டது. ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், சல்மான்கானுக்கு 10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

சல்மான்கானை தவிர மற்ற அனைவரும் விடுதலை அடைந்தனர். இதையடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டு இரண்டே நாட்களில் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்த வேண்டும் என சல்மான்கான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணைக்கு சல்மான்கான் ஜோத்பூர் நீதிமன்றம் வந்தார். அவரின் வருகையால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டன. இந்த மனு மீதான விசாரணையின் போது, அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கெட்டப்பட்டது. இதனால் இந்த விசாரணையை ஜூலை மாதம் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சல்மான்கான் வழக்கு ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - தமிழிசை கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்