இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன.
8 வயது குழந்தையை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் போன் மூலம் பழக்கமான கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இந்த நபர் பிரபல நடிகை பூர்ணாவையும் ஏமாற்ற முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது.
மும்பையில் பிரபலமான முனாவர்பாய் என்ற டிவி நடிகரை திடீரென கைது செய்து முறுக்கு காட்டியிருக்கிறது மும்பை போலீஸ் எந்த ஆதாரமும் இன்றி இவர் கைது செய்யப்பட்டதாகப் பலரும் கொந்தளிக்க மும்பை போலீஸ் கையை பிசைந்து கொண்டு இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கொடுத்து வரும் நெருக்கடியால் ஏற்கனவே மம்தா பானர்ஜி சிக்கித் தவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு எதிராக மேலும் ஒரு புதிய முஸ்லிம் கட்சி உதயமானது மம்தாவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்து மேற்கு வங்க மாநிலமும் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது
மகாராஷ்டிராவில் ஒரு அவியல் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்த கூட்டணியை மீண்டும் வெற்றி கூட்டணியாக மாற்றியிருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசுக்கு போட்டியாக சிவசேனா கட்சி இருந்து வந்தது.
20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடிக் கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி ரெஹனா பாத்திமா தன்னுடைய லிவிங் டுகதர் கணவரை பிரிய தீர்மானித்துள்ளார்.கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹனா பாத்திமா. அடிக்கடி ஏதாவது ஒருவகையில் சர்ச்சையை கிளப்புவது இவரது வழக்கம்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.