இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!

by Ari, May 5, 2021, 10:14 AM IST

இந்தியாவில் கொரோனா தொற்று முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலை கடும் வீரியமாக பரவி வருகிறது. இதனால் பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலாதளங்கள், மிருகக்காட்சி சாலைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

மனிதர்களிடம் அதிக பாதிப்பு ஏற்படுத்தி வந்த இந்த கொரோனா பெருந்தொற்று தற்போது விலங்குகளிடமும் தென்பட ஆரம்பித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ஹைதராபாத்தில் உள்ள நேரு தேசிய மிருக காட்சி சாலையில் 12 சிங்கங்கள் உள்ளன. அங்குள்ள சிங்கங்கள் கடந்த 4 நாட்களாக சரிவர உணவு உண்ணாமலும் மூக்கில் நீர் கசிந்த படியும் லேசான இருமலுடனும் காணப்பட்டன.

இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 ஆண் சிங்கங்கள், 4 பெண் சிங்கங்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, மூலக்கூறு உயிரியல் மையத்தில் பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 8 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.

மனிதர்களிடமிருந்து சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பரவி யிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது இதுவே முதன்முறை யாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நியூயார்க்கில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் 8 புலி மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை