லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..

by Logeswari, May 4, 2021, 15:29 PM IST

கொரோனா தொற்றை கண்டறிய சி.டி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றை கண்டறிய சி.டி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், லேசான நோய்த் தொற்று அறிகுறி இருப்பவர்களும் நோய் தொற்றை கண்டறிய அடிக்கடி சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்தார். சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

லேசான அறிகுறி இருப்பவர்கள் சி.டி.ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என ரந்தீப் குளோரியா கூறினார். சிடி ஸ்கேன் எடுப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். லேசான நோய்த்தொற்று இருப்பவர்களோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களோ ஸ்டிராய்டு எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

You'r reading லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை