ரயில் பெட்டிகளில் பானிக் பட்டன் பொருத்த ரயில்வே திட்டம்

பெண்கள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு ரயில் பெட்டிகளில் அவசர கால பட்டன் (பானிக் பட்டன்) பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ரயில்களில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. அதனால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதில், ரயில்களில் பெண் பயணிகள் அவரச உதவி எண்களுக்கு போன் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக உதவி பெற்று வருகின்றனர். அல்லது அவசரகால சங்கிலியை இழுத்து உதவி பெறுகின்றனர். இத்துடன், அவசர கால பட்டன் பொருத்தவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே பிஆர்ஓ சஞ்சய் யாதவ் கூறுகையில், “ ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்காக ரயில் பெட்டிகளில் அவசரகால பட்டன் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பட்டனுக்கான அவரச அழைப்பு மணி ‘கார்டு’ பெட்டியில் அமைப்படும். இந்த பட்டனை அழுத்தினால் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சென்று உதவி செய்வார்கள்.

இதைதவிர, பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தவும், ரயில் நடைமேடைகளில் சிசிடிவி பொருத்தி ரயில் நிற்கும்போது பெண்கள் பெட்டி கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது ” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ரயில் பெட்டிகளில் பானிக் பட்டன் பொருத்த ரயில்வே திட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்