மும்பையில் மதுரை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து

மும்பை அருகே சென்றுக்கொண்டிருந்த மதுரை எக்ஸ்பிரஸ் இன்று திடீரென தடம்புரண்டது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 123 கி.மீ., தொலைவில் கண்டாலா ரயில் நிலையம் அருகே மும்பை & புனே வழித்தடத்தில் மதுரை எக்ஸ்பிரஸ் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த வழித்தடத்தில் சென்றுக் கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டது. இதை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்திவிட்டார். மேலும், ரயில் மெதுவாக சென்றபோது தடம்புரண்டதால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த விபத்து எதிரொலியாக, 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தி சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டதை அடுத்து, ரயிலை மீண்டும் இயக்கப்பட்டது.

You'r reading மும்பையில் மதுரை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜூலை 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: உ.பி., அரசு அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்