பெண்களின் அழகு சீக்ரெட்.. ஆண்கள் கூட பயன்படுத்தலாம்..!

இக்காலகட்டதில் பெண்களின் முகத்தில் செயற்கை பொருள் பயன்படுத்துவதால் முகப்பரு,கரும்புள்ளிகள் ஆகியவை அழையா விருந்தாளியாய் வந்துவிடுகிறது. செயற்கையால் சருமம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனை தடுக்க இயற்கை பாணியில் ஒரு வழி உள்ளது. நமது முன்னோர்களும் அக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் இதனை பயன்படுத்தியே முகத்தை சுத்தமாகவும், பொலிவாகவும் வைத்து இருந்தனர். நலங்கு மாவை பயன்படுத்துவதால் எராளமான நன்மைகள் உள்ளது. வியர்வை துர்னாற்றம் வராமல் இருக்க நாம் செயற்கை நறுமணத்தை பயன்படுத்துவோம்.இதனால் உடலில் அரிப்புகள் போன்றவை ஏற்படும்.இதலில் இருந்து வெளி வர நலங்கு மாவு உதவுகிறது. அப்படிபட்ட நற்குணங்கள் மிக்க நலங்கு மாவை எப்படி வீட்டிலேயே செய்வது குறித்து பின் வருமாறு காணலாம்.

தேவையான பொருள்கள்:-
கடலை பருப்பு-50 கிராம்
பாசி பருப்பு-50 கிராம்
வசம்பு-50 கிராம்
ரோஜா மொக்கு-50 கிராம்
சீயக்காய்-50 கிராம்
அரப்பு தூள்-50 கிராம்
வெட்டி வேர்-50 கிராம்
விலாமிச்சை வேர்-50 கிராம்
நன்னாரி வேர்-50 கிராம்
கோரை கிழங்கு-50 கிராம்
பூலாங்கிழங்கு-50 கிராம்
கஸ்தூரி மஞ்சள்-50 கிராம்
வெந்தயம்-50 கிராம்
ஆவாரம் பூ-50 கிராம்
பூவந்தி கொட்டை- 50 கிராம்

செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்பு தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வெந்தயம், ஆவாரம் பூ மற்றும் பூவந்தி கொட்டை ஆகிய பொருள்களை ஒன்றாக சேர்த்து வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

நன்கு உலர்ந்த பொருள்களை யாவும் மிஸ்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த நலங்கு மாவை ஒரு டப்பாவில் கொட்டி காற்று புகாதவாறு மூடி வைக்கவும். வாரத்தில் 2 முறை நலங்கு மாவுடன் பச்ச பாலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாகவும், மென்மையாவும் இருக்கும்..

You'r reading பெண்களின் அழகு சீக்ரெட்.. ஆண்கள் கூட பயன்படுத்தலாம்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாதவன் நடிக்கும் மாறா ரிலீஸ் தேதி அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்