மணம் உள்ள பூக்களை பெண்கள் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்?

மணம் உள்ள பூக்களை பெண்கள் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்

கண் என்றால் பார்க்க  வேண்டும்; காது என்றால் கேட்க வேண்டும்; அதைப் போல் பூக்கள் என்றால் மணம் வீச வேண்டும். மணம் வீசாமல் இருப்பதை மலர்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது.

வாசனையற்ற மலர்களை முன்னோர்கள் பயன்படுத்தாமல் தவிர்த்தனர். உதாரணமாக கனகாம்பரத்திற்கு வாசனை கிடையாது. அதனால் அதனை ‘காட்டுக் கனகாம்பரம்’ என்று முன்னோர்கள் கூறி வந்தனர். காட்டில் மட்டுமே இருப்பதற்குதான் கனகாம்பரம் லாயக்கு என்பது  அவர்களின் கூற்று.

இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரு சிலர் கனகாம்பரத்தை பயன்படுத்துகின்றனர். பூக்கள் எதுவும் இல்லாதபட்சத்தில் கனகாம்பரத்தை சூடிக் கொள்ளும் பெண்களும் தற்போது கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பூக்களைக் கருத்தில் கொள்ளும் போது கனகாம்பரம் உயர்ந்தது என்றுதான் கூறமுடியும்.

நறுமணம் கமழக் கூடிய மலர்களை சூடிக் கொள்வதன் மூலம் அதன் மருத்துவ குணங்களையும் பெண்கள் பெற முடியும். மல்லிகை நறுமணம் சிலருக்கு பிடிக்கும். ரோஜாவின் வாசனை சிலருக்கு பிடிக்கும். தாழம்பூவின் வாசனையை விரும்புபவர்கள் இருக்கிறார்கள்.

மனதிற்கு பிடித்த நறுமணம் உள்ள மலர்களை சூடிக் கொள்வதன் மூலம் அதன் மருத்துவ குணத்தை பெறுவது மட்டுமின்றி, மன உளைச்சல், விரக்தியில் இருந்தும் பெண்கள் விடுபட முடியும் என சில மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. எனவே மணம் மிக்க மலர்களை சூடிக் கொள்வதே சிறந்தது.

You'r reading மணம் உள்ள பூக்களை பெண்கள் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்