ஒரு தலை பட்சமாய் தீர்ப்பு சொல்லும் நீதி தேவதை.. தாத்தா பேத்திக்கும் இடையே மோதல்..பிக் பாஸின் 32வது நாள்..

தகிடுதத்தம் பாடலோட எழுப்பினாரு பிக்பாஸ். எல்லாரும் கூட்டமா சேர்ந்து கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.மார்னிங் டாஸ்க்ல சுரேஷ் மத்தவங்களுக்கு ஜோசியம் சொல்லனும். தனக்கு இதுல நம்பிக்கை இல்லைனு முன்னாடியே தற்காப்புக்கு சொல்லிட்டாரு. முதல்ல நிஷா... தன்னம்பிக்கையோட தனியா நில்லும்மா, இங்க ஷா மட்டும் தான் இருக்கு... நி இல்லைனு சொன்னது நிஷாவுக்கு புரிஞ்சுதானு தெரியல.

அடுத்து ரம்யா. ரம்யா கைல ஒரு மச்சம் இருக்காம். உன் மேல தான் எல்லாருக்கும் கண்ணு. அதனால பார்த்து ஜாக்கிரதையா இருனு சொல்லி அனுப்பினாரு.

அடுத்து அனிதாவை கூப்பிட மனசே இல்லாம வந்தாங்க. அதாவது தன்னை வச்சு யாரும் ஸ்கோர் பண்ணிடக் கூடாதுனு தெளிவு. நீயே ஒருபெரிய கை. உனக்கு எதுக்கு அல்லக்கைனு சொல்லி அனுப்பினாரு. கடைசி வரைக்கும் சுரேஷ் முகத்தை கூட பார்க்கலை அனிதா...

விவாத மன்றத்தோட முதல் கேஸ். சோம் vs பாலா. தன்னை பப்பட்னு சொன்னது தப்பு. அதுக்கான காரணம் சொல்லுங்கனு கேட்டுருந்தாரு.அந்த கேள்விக்கு பாலா நேரடியா பதில் சொல்லலை. பாலா சார்பா வாதாட யாரும் வரலை. சோம் சார்பா ஒரு படையே வந்தது. சோம் சார்பா தீர்ப்பு வந்த உடனே ஆரி, சோமை தூக்கி கொண்டாடினார்.

சனம் ஏதோ பேசினாங்கனு அவங்களை டார்கெட் பண்ணி வெளிய அனுப்பறதுல குறியா இருந்தாங்க சுச்சி. சனமும் விடாம பேசிட்டு இருந்தாங்க. இருடி நீ வெளிய வா, அப்ப நான் வச்சுக்கறேன்னு ஒரு மைண்ட் வாய்ஸ் கேட்டுதா.... சுச்சி செஞ்சது ஒருதலைபட்சமானது. இதே மாதிரி பாலா ஒரு தடவைகுறுக்க பேசும் போது கண்டுக்கவே இல்லை.

அடுத்த கேஸ் சாம் vs ஆரி. இந்த கெல சாம் சொல்லிருக்கற குற்றச்சாட்டுகள் எல்லாமே போன வார கமல் சார் முன்னாடி நடந்த பிரச்சனைகள். ஆரி தன்னை கார்னர் செய்யறாருனு சொன்னாரு. அது உண்மையில்லை. அதே மாதிரி குரூப்பிசம் பத்தி பேசினாரு. ஆனா மீட்டிங்ல பேசும் போது அதை பத்தி நேரம் வரும் போது சொல்லுவேன்னு மழுப்பறாரு. அவரை யாரும் கார்னர் செய்யலை. அவர் தான் பாலாவை கார்னர் செஞ்சு பேசினார். (நோட் இந்த பாயிண்ட் மட்டும் தான் இந்த வாரம் நடந்தது). இது தான் சனமோட குற்றச்சாட்டு.

இதுக்கு ஆரி சொன்ன பதில்ல முழுக்க முழுக்க சாம் தான் தன்னோட ஜென்ம விரோதினு நினைச்சு பேசினா மாதிரி இருந்தது.கார்னர் செய்யறாங்கனு சொன்னதுக்கு, "இங்க வொர்க் அவுட் செய்ய வந்திங்களானு சாம் கேட்டது கார்னர் செய்யப்படறதுக்கு ஒரு உதாரணம். கேப்டன் வேலை என்னான்னு தெரியாம வந்துட்டாங்க. (நக்கலா ஒரு சிரிப்பு).

முந்தின டீம் கிட்ட ஒரு வேலையை முடிச்சு வாங்க தெரியலை. ஆனா எங்கிட்ட வந்து அந்த வேலையை செய்ய சொல்றாங்க. கேட்டா மழுப்பலா பதில் சொல்றாங்க. இது தான் பேவரட்டிசம்.ரெண்டு பேர் சேர்ந்து ஒருத்தரை ஜெயிச்சாங்க. தன்னை நம்பி தானே உள்ள வந்தாங்க. அப்ப பாலா ஹெல்ப் செய்யும் போது வேணாம்னு சொல்லிருக்கனும் இல்லை. ஏன் இவங்களுக்கு தன்னம்பிக்கை இல்லையா? நேர்மையா விளையாடினவனை காலி பண்ண நினைச்சாங்க. இவங்க தான் செல்பிஷ். சுயநலக்காரர்.

தறுதலைனு ஜாலியா ஒரு பொண்ணு கிட்ட சொன்னா தப்பில்லை. ஆனா அதுவே ஏய் தறுதலை, தறுதலைனு (சத்தமாக சாமை நோக்கி கைகாட்டி சொல்கிறார். தொடர்ந்து இரண்டு முறை). இப்படி சொன்னா தப்பு. நான் பொண்ணுங்களை மதிக்கறவன். பாலா அப்படி சொன்னது தப்புனு இப்பவும் சொல்லுவேன்.

இந்த வீட்ல தரக்குறைவான வார்த்தைகள் நான் பேசறதில்லை. ஆனா பாலா எவ்வளவு வார்த்தைகள் பேசிருக்காரு. அது உங்களுக்கு சரியா தெரியுது. ஏன்னா அவர் உங்களை கேப்டனாக்கிருக்காரு. அதனால நீங்க அவருக்கு சப்போர்ட் செய்யறிங்க. நீங்க ஒன்சைடா இருக்கீங்க, உங்களுக்கு பேவரான ஆளுக்கு மட்டும் தான் நீங்க இருக்கீங்கனு நான் சொல்ல வேண்டியதில்லை, உங்க ஸ்டேட்மெண்ட்லேயே இருக்குனு சொல்லல்லி முடிச்சாரு ஆரி.

இதுல இந்த வழக்குக்காக சாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கும் ஆரி சொன்ன பதிலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போன வாரம் கமல் சார் முன்னாடி பேசின விஷயம் தான் வழக்கு. அதுக்கு அவர் எந்த பதிலும் சொல்லவே இல்லை. சாம் ஒரு கேள்வி கேட்டதால கார்னர் செய்யறதுக்கு உதாரணமா சொல்றாரு. அதாவது சாம் தன்னை இப்படி கேள்வி கேட்டு கார்னர் செய்ய போறாங்கனு, அவருக்கு போன வாரமே தெரிஞ்சு கமல் சார் முன்னாடி பேசிருக்காரு போல.

பாலா ஹெல்ப் செஞ்ச தான் சாம் கேப்டன் ஆனாங்க. யாரும் மறுக்க முடியாது. பாலா ஹெல்ப் செய்யும் போது வேணாம்னு சொல்லிருக்கனும்னு ஆரி சொல்றாரு. அப்ப இதே கேள்வி ரம்யாவுக்கும் பொருந்தும் இல்லையா? நிஷா தான் ஒரிஜினல் கேப்சன் பதவி வேட்பாளார். அவரை மாத்தி சாமை கொண்டு வந்தது ரம்யா. அப்படி ரம்யா. மாத்தும் போது நீங்க ஏன் வேணாம்னு சொல்லலைனு கேக்கலாமே. அதுவும் ஒரு குற்றச்சாட்டா வைக்கலாமே.

சோம் தனியா விளையாடினாருனு திரும்ப திரும்ப சொன்னாரு சரி. கேப்டன்சி டாஸ்க்ல சோம் கேப்டனாகனும்னு பந்து எறிஞ்சவங்க யாருனு லிஸ்ட் எடுத்து பாருங்க. ரியோ, அர்ச்சனா, நிஷா, வேல்ஸ், ஆரி ரமேஷ். இத்தனை பேரும் சோமுக்கு தான் பந்து எறிஞ்சாங்க. இதுக்கு அடுத்த இடத்துல தான் பாலாவே இருந்தாரு. ஆரி, அனிதா ஜெயில்ல இருந்தாங்க. அப்ப மீதி இருக்கறவங்க யாருனு பார்த்தா சுரேஷ், கேப்பி, ரம்யா, ஆஜித். நாலு பேர் தான் பாலா, சாமுக்கு பந்து எறியறாங்க.

அந்த டாஸ்க்கை பொறுத்த வரைக்கும் பந்து எறிஞ்சதுக்கு அப்புறம் யார் வேணா எடுத்துக்கலாம்ங்கறது உண்மை தான். ஆனா நான் இங்க எடுத்துச் சொல்றது இண்டன்ஷன். 6 பேர் சேர்ந்து ஒருத்தரை கேப்டனாக்கனும் முடிவு செஞ்சு ஹெல்ப் பண்ணினா தப்பில்லை. ஆனா ஒரு ஆள் ஹெல்ப் செய்யறது எப்படி தப்பாகும். தவறுனு சொன்னா ரெண்டுமே தப்பு தான். அங்க இருந்தது தான் குரூப்பிசம். அதுல ஆரியும் இருந்தாருங்கறதும் உண்மை. இதுல என்ன கொடுமைன்னா சோம் இதுவரைக்கும் அந்த முடிவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசலை. அவரே தப்புனு சொல்லாத போது, வருத்தப்படாத போது, ஆரி இதை திரும்ப திரும்ப பேசி, சாம் மேல குற்றச்சாட்டு வைக்கறாரு.

ஆரியோட க்ளோசிங் ஆர்கியுமெண்ட் பாருங்க. அதாவது சாம் தன் மேல வச்ச குற்றச்சாட்டை மறுத்து பேசாமா, சாம் மேல குற்றச்சாட்டு வச்சு முடிக்கறார்.அந்த பாயிண்டை தான் சாம் மறுபடியும் சொல்றாங்க. நான் கேட்ட கேள்வி யெல்லாம் அப்படியே இருக்கு, அதில்லாம என் மேல புதுசா குற்றச்சாட்டு சொல்லிருக்காரு அவ்வளவு தான்னு முடிச்சது நினைவிருக்கலாம்.

இதுக்கு நடுவுல சோம் தனியா , நேர்மையா விளையாடும் போது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடி தோக்கடிச்சீங்கனு சொன்ன போது கைதட்டல் சத்தம் கேட்டுச்சு. யாருனு தான் தெரியல.

சாம் இடத்துல சனம் இல்லை அனிதா இல்லை வேற யார் இருந்திருந்தாலும் அழுதிருக்க வாய்ப்பிருக்கு. ஒருவேளை அழலேன்னாலும் இதை வச்சு ஒரு பெரிய சீன் கிரியேட் பண்ணி, சிம்பதி கிரியேட் பண்ணி ஸ்கோர் பண்ணிருப்பாங்க. ஆனா சாம் இதை கடந்து போனது தரமான சம்பவம்.

மொத்தத்துல இந்த வீட்ல ஒரு விஷயத்தை அடுத்தவங்க செஞ்சா தப்பு, அதையே நாம செஞ்சா சரி. இது நடந்து முடிஞ்சு கொஞ்ச நேரத்துக்குள்ள வீட்ல இருக்கறவங்க எல்லாரையும் கூப்டு வச்சு ஆரியோட சமாதானம் பேச ட்ரை பண்றாங்க சாம். உங்கள்ல யாராவது எங்க ரெண்டு பேருக்கும் இடையில பேசுங்கனு சொல்றாங்க. இதை சொல்றதுக்கு முன்னாடி "எனக்கு கேப்டனா இருக்க தகுதியில்லைனு சொல்றாரு, இதுக்காக நான் போய் ஐ ஏ எஸ்லாம் படிச்சுட்டு வர முடியாது." சொல்லவும் அந்த இடத்துல கை தட்டி சிரிக்கறாங்க பாலாவும், ரம்யாவும்.

சமாதானம் பேசறது ரெகுலராவே இந்த வீட்ல சாம் செஞ்சுட்டு வராங்க. அர்ச்சனா சுரேஷ் பிரச்சினையில, பாலா கிட்ட "நீ செஞ்சது தப்புனு" சொல்லி அர்ச்சனா கிட்ட பேச வச்சது சாம் தான். சுரேஷ், பாலா ரெண்டு பேருக்கும் இடையில் இப்ப இருக்கற பிரச்சினைக்கும் போய் பேசுங்கனு சொன்னாங்க. அவங்க கேப்டன் ஆனதுக்கு அப்புறமா அன்னின்னிக்கு நடக்கற பிரச்சினையை நாள் முடிவுல நாம பேசி தீர்க்கனும்னு தினம் மீட்டிங் நடத்தறாங்க. டைனிங் டேபிள்ல "வொர்க் அவுட் செய்யறதுக்கு வரலைனு சொன்னதுக்கு அப்புறம் அதே ஆரி கிட்ட போய் பேசி மன்னிப்பு கேட்டதும் சாம் தான். போன வார டீம் க்ளீனிங் செய்யாத பிரச்சினைக்கு சாமுக்கும் ஆரிக்கும் விவாதம் வந்த போது அன்னிக்கு நைட் மீட்டிங் நடத்தி, அந்த பிரச்சினையை அப்பவே சால்வ் செஞ்சதும் சாம் தான். அன்சீன்ல இருந்த அந்த விஷயத்தை நான் எழுதிருக்கேன். முன்னாள் கேப்டன் அர்ச்சனா அதை பத்தி ஆரிகிட்ட பேசும் போது மழுப்பலா பதில் சொன்னதும் இதே ஆரி தான்.

சோ எந்த பிரச்சினை வந்தாலும், யாருக்கு இடையில வந்தாலும் அதை மேலும் மேலும் வளர்க்காம, சம்பந்தபட்டவங்க ரெண்டு பேரையும் உக்கார வச்சு பேசி சமாதானப்படுத்த முயற்சி பண்றது சாம் மட்டும் தான். ஆனா ஆரியை பொறுத்தவரைக்கும் கேப்டனாகறதுக்கு இது பத்தாதுனு சொல்றாரு.

அதே மாதிரி தான் ஆரியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கும் இப்பவே சமாதானம் பேசலாம்னு இறங்கி வராங்க. சாம் அடிச்ச கமெண்டுக்கு கைதட்டல் வந்த உடனே அதே காரணத்தை முன்வச்சு, பாலா கிட்ட திரும்பவும் சண்டைக்கு போறாரு. ரெண்டு பேரும் அபாயகரமான உடல்மொழியோட பேசிகிட்டதுக்கு தண்டனை கொடுத்தே ஆகனும். இருவருக்கும்.

ரம்யா போய் கேக்கும் போது, கைதட்டி இரிடேட் செஞ்சதால நான் பேசலைனு சொல்றாரு.

இந்த வீட்ல சுரேஷ் vs அனிதா சண்டை நடந்திருக்கு. பாலா vs சனம் சண்டை நடந்திருக்கு. பாலா vs அர்ச்சனா, பாலா vs ரியோ, ஆரி vs அர்ச்சனா, சனம் vs சுரேஷ் சண்டைகள் நடந்திருக்கு. மேல நடந்த சண்டைக்கும் இந்த வாரம் ஆரி போடற சண்டைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. பாலா, சனம், அனிதா, ரியோ, அர்ச்சனா, சுரேஷ் இவங்க எல்லாரும் சண்ட்சி போட்டாங்கன்னா, மறுபடியும் சேருவதற்கு வாய்ப்பிருந்தது. அப்புறமா ஓரளவு பேசறாங்க. ஆனா ஆரி இந்த வாரம் போடற சண்டைல திரும்பவும் சேரதுக்கான வாய்ப்பே இருக்காது போலருக்கு. அந்தளவு எக்ஸ்ட்ரீமா கத்தறாரு.

தன்மேல யாராவது குற்றம் குறை சொன்னா, அதே தப்பை யார் யார் செஞ்சாங்கனு சொல்லட்டுமானு கேக்கறாரு. பாலா கிட்ட "நீ என்னென்ன தப்பு செய்யறேன்னு ஆதாரமே இருக்குனு சொல்றாரு. ஆனா எதையும் வெளிய சொல்ல மாட்டாரு.

அடுத்த கேஸ் சுரேஷ் vs கேப்பி. தாத்தா ஓவர் ரியாக்டிங் பண்றாரு. கொளுத்தி போடறாருனு கேப்பி கம்ப்ளையிண்ட். ஜாலியா ஆரம்பிச்ச இந்த வழக்கு வினைல முடிஞ்சுது.

கேஸ் முடியும் போது கேப்டன்ற முறைல சாம் போய் சுச்சி கிட்ட பேசினதை சுரேஷ் ரசிக்கவே இல்ல. அவரோட ஆர்கியுமெண்ட் போது, சுமங்க்ச்லினு சொன்ன உடனே அனிதா எழுந்து அப்ஜக்ட் செஞ்ச கோபம் எல்லாம் சேர்ந்து அதை கேப்பி மேல காட்ட ஆரம்பிச்சுட்டாரு. இனிமே எங்கிட்ட வந்து பேசாதேனு சொல்லவும், கேப்பி ஒரு மாதிரி ஆகிட்டாங்க.

இரவு சாம் பையனோட பர்த்டே வீடியோ வந்தது. அதை பார்த்து உணர்ச்சி வசப்படறதோட முடியுது நேற்றைய நாள்.

You'r reading ஒரு தலை பட்சமாய் தீர்ப்பு சொல்லும் நீதி தேவதை.. தாத்தா பேத்திக்கும் இடையே மோதல்..பிக் பாஸின் 32வது நாள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்