ஆட்டம் காட்டும் தங்கத்தின் விலை! ரூ.37000 க்கு இறங்கிய தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 29-10-2020!

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது . ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட விலை உயரத் தொடங்கியது ஆனால் வாரத்தின் இறுதியில் விலை இறக்கம் கண்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4768 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 30 விலை குறைந்து, கிராமானது ரூ‌ 4738 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4738
8 கிராம் ( 1 சவரன் ) - 37904

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5148 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் கிராமானது ரூபாய் 30 விலை குறைந்து, கிராம் 5118 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5118
8 கிராம் - 40944

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 1.70 பைசா விலை குறைந்து, கிராம் 64.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64700 க்கு விற்பனையாகிறது.

You'r reading ஆட்டம் காட்டும் தங்கத்தின் விலை! ரூ.37000 க்கு இறங்கிய தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 29-10-2020! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேறு ஆளை எழுத வைத்து மோசடி ஜேஇஇ தேர்வில் முதல் மாணவன், தந்தை உட்பட 5 கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்