தனுஷ் வளர்த்துவிட போகும் அடுத்த விஜய் டிவி பிரபலம் யார் ?

சின்னத்திரையில் கலக்கிய சிவகார்த்திகயேனுக்கு நடிகர் தனுஷ் பெரிய திரையில் வாய்ப்பு கொடுத்ததை அடுத்து, ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோ பட்டியலில் இருக்கிறார்.

இந்நிலையில், சிவக்கார்த்திகேயனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள தீனா, தனுஷ் வளர்த்துவிடும் அடுத்த விஜய் டிவியின் பிரபலம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த பவர் பாண்டி படத்தில் தீனா சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். தனுஷ் தொடக்கி வைத்த அதிர்ஷ்டமோ என்னமோ, மளையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் தீனா ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தீனாவுக்கு நடிகர் தனுஷின் மூலம் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

You'r reading தனுஷ் வளர்த்துவிட போகும் அடுத்த விஜய் டிவி பிரபலம் யார் ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் சாதனை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்