`விக்ரம்nbsp செம்ம nbspஉற்சாகமா nbspபாடியிருக்கார்.. பூரிக்கும்nbspஜிப்ரான்nbsp

Actor Vikram sings a songnbspin KadaramKondan movie

`தூங்காவனம்’ படத்திற்குப்  பின் நீண்ட  இடைவெளி  எடுத்த  இயக்குநர்  ராஜேஷ்  எம் செல்வா  தற்போது நடிகர் விக்ரமை வைத்து  `கடாரம் கொண்டான்’  படத்தை  எடுத்திருக்கிறார்.  இந்த  படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும்  நடித்திருக்கிறார். 

கமல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியா  மற்றும்  சென்னையில்   நடந்து முடிந்துள்ளது. தற்போது  டப்பிங்  வேலைகள்  நடந்து  வருகிறது.  

இந்நிலையில்  இப்படத்துக்கு இசையமைத்திருக்கும்  ஜிப்ரான்  நடிகர்  விக்ரமை  ஒரு  பாடல்  பாடவைத்திருப்பதாக  ட்விட்டரில்  மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.   ஜிப்ரான் தன் ட்விட்டர்  பக்கத்தில்,  ”கடாரம் கொண்டான்  படத்துக்காக  விக்ரம் சார்   ஒரு  பாடல் பாடியிருக்கிறார். முழு ஈடுபாட்டோடு  உற்சாகமாகப்  பாடியிருக்கிறார்.  இது  உங்கள்  அனைவருக்கும் உற்சாகத்தையும்,  ஊக்கம்  கொடுக்கும்  பாடலாகவும்  அமையும்.  காலை எழுந்தவுடன்  இந்த  பாடலை  கேட்டால்  தன்னம்பிக்கை  கொடுக்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

You'r reading `விக்ரம்nbsp செம்ம nbspஉற்சாகமா nbspபாடியிருக்கார்.. பூரிக்கும்nbspஜிப்ரான்nbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரம் எடுத்த `அட்டகத்தி’ நாயகி .. முழு தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்