ரஜினி படத்தை பார்த்து அவெஞ்சர்ஸ் கிளைமேக்ஸ் வச்சேன் அவெஞ்சர்ஸ் இயக்குநர்!

Avengers director Joe Russo reveals Rajinikanths Robot inspired Age Of Ultron climax

அவெஞ்சர்ஸ் பட வரிசையில் வெளியாகிய ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ரஜினியின் எந்திரன் படத்தை பார்த்து வடிவமைத்ததாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார்.

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது. கேப்டன் மார்வெல், அயன்மேன், தோர், ஹல்க், பிளாக் விடோ, கேப்டன் அமெரிக்கா, ஆன்ட்மேன் மற்றும் வில்லன் தானோஸ் என பல சூப்பர் ஹீரோக்கள் நடித்துள்ள இந்த படம் வெளியாவதை முன்னிட்டு, அதனை இந்தியாவில் விளம்பரப்படுத்த, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் சகோதர இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அவர், சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தைப் பார்த்து, அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை தான் வடிவமைத்ததாகவும், ஆனால், நீளம் காரணமாக அந்த காட்சி கடைசி நேரத்தில் படத்தில் நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

வில்லன் 2.0 தன்னைப் போல, பல ரோபோக்களை உருவாக்கி, அவர்களை ஒன்றோடு ஒன்றிணைத்து பிரம்மாண்ட ரோபோவாக உருவாகும் காட்சியை தான் ரஸ்ஸோ வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும், நடிகை பிரியங்கா சோப்ரா, தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

You'r reading ரஜினி படத்தை பார்த்து அவெஞ்சர்ஸ் கிளைமேக்ஸ் வச்சேன் அவெஞ்சர்ஸ் இயக்குநர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ட்ரூ காலர் செயலியுடன் ரெட் பஸ் செயலி இணைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்