அஜித் இயக்குநருடன் சூர்யா ஒப்பந்தமானது எப்படிhellip கோலிவுட் அப்டேட்

Actor Ajith Favourite director siva to do a movie with surya nbspnbsp

அஜித்தை வைத்து அடுத்தடுத்து படங்களைக் கொடுத்த இயக்குநர் சிவா, அடுத்த கட்டமாக சூர்யாவை இயக்கவிருக்கிறார்.

கடந்த 2011ல் கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கினார் சிவா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அஜித்துடனே நான்கு படங்களில் பயணித்துவிட்டார் இயக்குநர் சிவா.

இந்நிலையில் அஜித் தற்பொழுது ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இயக்குநர் சிவா அடுத்த நகர்வாக சூர்யாவை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

சூர்யா - சிவா கூட்டணி எப்படி சாத்தியமனது என்று விசாரித்தால், சிறுத்தை படத்தை இயக்கும் போதே ஸ்டூடியோக்ரீன் நிறுவனத்துக்கு மற்றுமொரு படத்தை இயக்குவதாக ஒப்புக் கொண்டாராம் சிவா. ஆனால் அஜித்துடனே படங்கள் தொடர்ந்து இருந்ததால் அதற்கான வாய்ப்பு கூடிவரவில்லை. இந்நிலையில் சூர்யாவுக்கு ஒரு கதையை சொல்லியிருக்கார் சிவா. அது சூர்யாவுக்கு பொருந்திப் போக ஸ்டூடியோ க்ரீனுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் படமும் தொடங்கிவிட்டது.

தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்துவருகிறார் சூர்யா. தொடர்ந்து  இறுதிச் சுற்று சுதா கொங்கரா இயக்கத்திலும், இயக்குநர் பாலா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இப்படங்களுக்குப் பிறகோ, அல்லது படத்தின் நடுவிலோ சிறுத்தை சிவாவுடனான படத்தில் நடிக்கிறாராம் சூர்யா.

You'r reading அஜித் இயக்குநருடன் சூர்யா ஒப்பந்தமானது எப்படிhellip கோலிவுட் அப்டேட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈசிஆர் ரெசார்ட் அட்டகாசம்.. முதலை பண்ணையில் செத்துக் குவியும் முதலைகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்