கொலைகாரன் படம் வெளியாவதில் அப்படி என்னதான் சிக்கல்

Reason behind vijay antony kolaigaran delay

விஜய்ஆண்டனி, அர்ஜூன் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் கொலைகாரன். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.




விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள படம் கொலைகாரன். இப்படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் ரிலீஸூக்கு தயாராகிவிட்டது.

படத்தை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட இருப்பதாக முன்னர் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சொன்னபடி படம் வெளியாகவில்லை. எப்பொழுது படம் ரிலீஸ் என்பது குறித்த எந்த செய்தியையும் இன்னும் படக்குழு சொல்லவும் இல்லை.

அதற்கு காரணம் என்னவென்பது தற்பொழுது தெரிந்துள்ளது. கொலைகாரன் படத்தை தயாரிக்கும் தனஞ்செயன் ட்விட்டரில் ,“ படவெளியீடுகளில் இந்த மாதம் கடும்போட்டி இருக்கிறது. மே 1 ஆம் தேதி தேவராட்டம், மே 3 ஆம் தேதி கே 13, ஒன்பது, பத்து தேதிகளில் நீயா 2, கீ, 100 மற்றும் அயோக்யா, மே 17 ஆம் தேதி மிஸ்டர் லோக்கல், மே 24 லிசா , மே 31 ஆம் தேதி என் ஜி கே ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதனால் படம் தள்ளிப்போகிறது. கொலைகாரன் ரிலீஸ் எப்போது என்பதை விரைவில் அறிவிக்கிறோம்” என்று ட்விட்டியுள்ளார்.

You'r reading கொலைகாரன் படம் வெளியாவதில் அப்படி என்னதான் சிக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லாரன்ஸுடன் போட்டிப்போடும் சுந்தர் சி.. விரைவில் அரண்மனை 3

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்