யார் கொலைகாரன்? கொலைகாரன் விமர்சனம்!

Kolaigaran Movie Review

லீலை படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், கீதா, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீப காலமாக தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனிக்கு கொலைகாரன் படம் எப்படி வந்துருக்குன்னு இந்த விமர்சனத்துல பார்க்கலாம்.

கொலைகாரன் கதைக்களம்:

நாயகி ஆஷிமா நர்வால் கொலை செய்யப்படும் காட்சியில் படம் துவங்குகிறது. அடுத்த காட்சியில், தான் கொலை செய்ததாக விஜய் ஆண்டனி சரண்டர் ஆகிறார்.
பிளாஸ்பேக் காட்சிகளாக படம் நகர்கிறது. ஆஷிமா நர்வால் மற்றும் அவரது தாய் சீதா, விஜய் ஆண்டனி இருக்கிற ஃபிளாட்டுக்கு எதிர் ஃபிளாட்ல இருக்காங்க..
தினமும் விஜய் ஆண்டனி ஆஷிமா கிளம்பும்போது அதே டைம்ல அவரும் ஆபிசுக்கு கிளம்புறாரு.

ஒரு கட்டத்துல ஆஷிமா நர்வாலுக்கு ஏற்படுகிற ஒரு பிரச்னையில அவங்கள காப்பாத்த விஜய் ஆண்டனி செய்ற ஒரு விஷயம் தான் படத்தோட கதைக் களமா இருக்கு.
ஆஷிமா நர்வாலுக்கு தொல்லை கொடுக்கிற வம்சி எனும் கதாபாத்திரத்த யாரு கொலை செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்குற போலீஸ் அதிகாரியா அர்ஜுன் நடிப்பு பிளஸ் அனுபவத்தால மிரட்டியிருக்காரு.

விஜய் ஆண்டனி தான் தான் அந்த கொலைய செஞ்சதா சரண்டர் ஆகுற இடத்துல, இல்லை இவர் பண்ணலன்னு கண்டுபிடிக்கிற அர்ஜுன், ஒரு பெரிய ட்விஸ்ட்ல அவரே குழம்பி போய்டுறாரு.. இண்டர்வெல் பிளாக்ல விஜய் ஆண்டனி ஒரு போலீஸ் அதிகாரின்னு தெரிய வருகிற இடம் படத்தில் மாஸ் காட்டுகிறது.

இறுதி வரை சீட் எட்ஜ் த்ரில்லராக இந்த படம் கொண்டு செல்லப்பட்ட வகை அருமை. என்ஜிகே படத்தை போல டீகோடிங் நீங்களே பண்ணிக்கோங்கன்னு சொல்ற மாதிரி சீன்ஸ் வைக்காம, க்ளியரா புரிகிற மாதிரி எல்லாத்துக்குமான காட்சிகள் படத்தில் இருக்கு.
நான், சலீம், பிச்சைக்காரன் வரிசையில் விஜய் ஆண்டனிக்கு இன்னொரு வெற்றிப்படமா கொலைமாரன் அமைஞ்சிருக்கு.
சினி ரேட்டிங்: 3.5/5.

You'r reading யார் கொலைகாரன்? கொலைகாரன் விமர்சனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிதி ஆயோக்கினால் பலனில்லை; கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்