400 கோடி கிளப்பில் இணைந்த சாஹோ!

Saaho joined in 400 crore club

பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறதாம். இதுவரை 400 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாகுபலி 2 படத்தின் 1500 கோடி பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சாஹோ. இந்த படத்தை இயக்குநர் சுஜித் இயக்கி உள்ளார். ஹாலிவுட் தரத்திற்கு இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், கதையில் பெரிதாக எந்த ஒரு ஸ்வாரஸ்யமும் இல்லை என்றும், இந்த படத்திற்கு ஏன் இத்தனை கோடிகளை வீணாக இரைக்கின்றனர் என்ற விமர்சனங்கள் தான் படத்தை பார்த்த பலரது மத்தியிலும் எழுந்தது.

ஆனால், விமர்சனங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு, பிரபாஸை திரையில் காண கூட்டம் அலை மோதிக் கொண்டு தான் இருக்கிறது. பிரம்மாண்ட படங்கள் என்றாலே நம் மக்கள் கட்டாயம் தியேட்டரில் பார்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளது தான் சாஹோ படத்தின் வெற்றி என்றும் கூறலாம்.

இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். அவருக்கு சும்மா லூசு ஹீரோயின் கதாபாத்திரம் அல்லாமல், அவருக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு தாராளமாகவே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ் மற்றும் அருண் விஜய் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான சாஹோ திரைப்படம் 10 நாட்களில் 400 கோடி வசூலை குவித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் 500 கோடிகளை இந்த படம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading 400 கோடி கிளப்பில் இணைந்த சாஹோ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாகன விற்பனை கடும் வீழ்ச்சி.. ஆகஸ்ட்டில் மந்தமான சூழல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்