ரசிகர்கள் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய சூர்யா!

Kappan Trailer 2 released

சூர்யாவின் காப்பான் படத்தின் புதிய டிரைலர் தமிழில் வெளியாகி இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி என நட்சத்திர பட்டாளங்கள் பட்டையை கிளப்ப உருவாகியுள்ள படம் தான் காப்பான்.

இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால், அவசரகதியில் அந்த டிரைலர் வெளியிடப்பட்டதால், சரியாக எடிட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நேற்று காப்பான் படத்தின் தெலுங்கு வெர்ஷனான பந்தோபஸ்த் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஆனால், அது தமிழ் டிரைலரை விட பக்காவாக மிரட்டியது.

அதனை கண்ட சூர்யா ரசிகர்கள், இந்த டிரைலரை தமிழிலும் வெளியிடுங்கள் என கோரிக்கை வைக்க, தற்போது, தமிழில் அந்த டிரைலர் வெளியிடப்பட்டு சூர்யா ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காப்பான் படம் ரிலீஸாகி புதிய சாதனை படைக்க காத்திருக்கிறது.

You'r reading ரசிகர்கள் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய சூர்யா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடைக்குட்டி சிங்கத்தின் அடுத்த பாகமா நம்ம வீட்டு பிள்ளை?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்