தேசிய விருதுலயே ஏமாத்திட்டாங்க ஆஸ்கருக்கு பரிந்துரைப்பாங்களா தமிழ் படங்களை?

2020 Oscar Nomination Indian movie list revealed

ஆஸ்கர் 2020க்கான இந்திய தேர்வு படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சில தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்திய படங்களை தேர்வு செய்து அனுப்புவார்கள். ஆனால், அது ஆஸ்கரின் இறுதி பரிந்துரை பட்டியலில் கூட என்ட்ரி ஆகாமல் ரிஜெக்ட் ஆகிவிடும்.

ஒரு சில படங்களை தவிற ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் எந்த இந்திய படமும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2020 ஆஸ்கர் போட்டிக்கான இந்திய பரிந்துரை படமும் எதுவாக இருக்கும் என்பதை கொல்கட்டாவில் நாளை தேர்வுக்குழு முடிவு செய்ய உள்ளது. தற்போது அந்த படங்களின் பெயர் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதில், தமிழ் படங்களான தனுஷின் வடசென்னை மற்றும் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் மற்றும் நேற்று வெளியான பார்த்திபனின் ஒத்தசெருப்பு உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளது தமிழ் ரசிகர்களை குதூகலம் அடையச் செய்துள்ளது.

மேலும், இந்த படத்தில் பாலிவுட் படங்களான அந்தாதூன், உரி சர்ஜிகல் அட்டாக், கல்லி பாய், கேசரி, பாட்லா, ஆர்டிகல் 15, படாய் ஹோ படங்களும், மலையாள படமான உயரே தெலுங்கு படமான டியர் காம்ரேட் மற்றும் கன்னட படமான குருக்‌ஷேத்ரா ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலிலே மேற் குறிப்பிட்ட தமிழ் படங்கள் ஓரங்கப்பட்ட நிலையில், ஆஸ்கர் விருதுக்கு நிச்சயம் இந்திய அரசு அனுப்புமா என்பது சந்தேகமில்லாத ஒன்று.

இதில் வேடிக்கை என்ன வென்றால், தெலுங்கில் தேசிய விருது அள்ளிய மகாநடி படம் லிஸ்டில் இல்லாமல் படுதோல்வியை சந்தித்த டியர் காம்ரேட் பட்டியலில் இருப்பது தான்.

தேசிய விருதை அள்ளிய அந்தாதூன் அல்லது உரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் இந்த இரு படங்களில் ஒரு படத்தை தான் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைப்பர் என திரை மேதாவிகள் கணிப்பு தெரிவித்துள்ளனர்.

You'r reading தேசிய விருதுலயே ஏமாத்திட்டாங்க ஆஸ்கருக்கு பரிந்துரைப்பாங்களா தமிழ் படங்களை? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்