தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் எப்போது?... ரிலீஸ் தேதியை அறிவித்தார் கவுதம் மேனன்...

Goutham Menon Directs Dhanush

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. மேகா ஆகாஷ் பீரோயினாக நடிக்க முக்கிய பாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு போன்ற பல்வேறு பிரச்னைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் பல முறை இப்படம் தள்ளிப்போனது. இந்நிலையில், சென்னையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் ப்ன்ஹ்கேற்ற திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அவரிடம்,எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸ் குறித்து மாணவர்கள் கேட்டதற்கு பதிலளித்த கவுதம் மேனன், ”நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும். நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றார்.

You'r reading தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் எப்போது?... ரிலீஸ் தேதியை அறிவித்தார் கவுதம் மேனன்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யோகிபாபுவின் காவி ஆவி நடுவுல தேவி.. 11 தோற்றங்களில் நடிக்கிறார்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்