குழந்தைகளுடன் இந்துஜா, அதுல்யா ரவி கொண்டாடிய தீபாவளி..

Actress Athulya Ravi and Indhuja Celebrate Diwali Festival 2019

உதவும் உள்ளங்கள் என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த வருடம் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்கள்.

இதில் இந்துஜா பேசும்போது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன் என்றார்.

அதுல்யா ரவி பேசும்போது, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.

You'r reading குழந்தைகளுடன் இந்துஜா, அதுல்யா ரவி கொண்டாடிய தீபாவளி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ.. 400வது படத்தல் சவுகார் ஜானகி ரீ என்ட்ரி....

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்