அலியாபட் ஷூட்டிங் எப்போது... அஜய்தேவகன் எங்கே? டபுல் ஹீரோ படம் இயக்கும் இயக்குனர் ராஜமவுலிக்கு சரமாரி கேள்வி...

SS Rajamouli Troubled by Shocking Questions

பாகுபலி படத்தையடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிகின்றனர். ராம் சரணுக்கு ஜோடியாக அலியாபட் நடிக்கிறார்.
ஆனால் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யாரென்று தெரியவில்லை. இதனால் அவரின் ரொமான்ஸ் காட்சிகள் படமாகமலிருக்கிறது.
ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்காக அலியா பட் கால்ஷீட் உறுதி செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும் அவர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சிகூட எடுக்கப்பட வில்லை. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அஜய்தேவ்கன் காட்சிகளும் படமாக்க வேண்டி உள்ளது. இதையெல்லாம் ராஜமவுலி எப்போது படமாக்கப்போகிறார் என்று திரையுலகினர் சந்தேக கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய பாகுபலி, நான் ஈ போன்ற படங்களுக்கு முதலிலேயே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்ன தேதியை விட பல மாதம் தாமதத்துக்குபிறகே வெளியானது.
தற்போது ஆர்ஆர்ஆர் படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது...

You'r reading அலியாபட் ஷூட்டிங் எப்போது... அஜய்தேவகன் எங்கே? டபுல் ஹீரோ படம் இயக்கும் இயக்குனர் ராஜமவுலிக்கு சரமாரி கேள்வி... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாகன கட்டுப்பாடு விதிமுறை.. டெல்லியில் இன்று அமலானது.. இரட்டை இலக்க கார்களுக்கு அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்