கமலுக்கு காமெடி நடிகர் அளித்த அன்பு பரிசு...65வது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து...

Actor Vivekh Gifted Agni Siragugal Book To Kamal Haasan on his 65th Birthday

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது தந்தைக்கு சிலை திறந்தார் கமல். மறு நாளே தனது திரையுலக குரு டைரக்டர் கே. பாலச்சந்தருக்கு தனது பராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் சிலை வைத்தார்.
இதில் சூபர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக், கமல்ஹாசனுக்கு அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விவேக், கலையுலக வானில் இருந்து...சமுதாய வாழ்வுக்கு.. சிறகு விரிக்கும் தங்களுக்கு இந்த அக்னிச் சிறகுகள்.. என் அன்புப் பரிசு என தெரிவித்திருக்கிறார்..

You'r reading கமலுக்கு காமெடி நடிகர் அளித்த அன்பு பரிசு...65வது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலக அளவில் தளபதி விஜய்யின் பிகில் பட வசூல்..சிங்கப்பெண் பொல்லம்மா புது தகவல்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்