சமந்தாவை கடுப்பேற்றிய குழந்தை பற்றிய கேள்வி... ஆண்டு, தேதி, நேரத்துடன் பதில் அளித்தார்...

Samantha Gives An Epic Reply To Her Pregnancy Rumour

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன் யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி 2 வருடம் ஆகியும் சமந்தா குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு நடிப்பை தொடர்ந்து வருகிறார். இந்த வருடம் படங்களை ஒப்புக்கொள்ளாமல் 1 வருடம் ஒய்வு எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணியிருந்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்த வண்ண மிருக்கிறது.
மேலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் சமந்தாவை விடுவதாக இல்லை. எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், உங்களின் உடல் ஒர்க் ஆகிறது எப்படி இருக்கிறது, நீங்கள் கர்ப்பம் ஆகியிருப்பதாக கூறுகிறார்களே என்று கேட்டு நச்சரித்த வண்ணமிருக்கின்றனர்.
தொடக்கத்தில் அமைதியாக பதில் அளித்துவந்த சமந்தா திடீரென்று டென்ஷன் ஆனார்.
'என் உடல் எப்படி ஒர்க் ஆகிறது என்று கேட்கிறீர்கள்... 2022 ஆகஸ்ட் 7ந்தேதி 7 மணிக்கு குழந்தை பெற்றுக்கொள்வேன்' என்று கடுப்பாக பதில் அளித்துள்ளார்.

You'r reading சமந்தாவை கடுப்பேற்றிய குழந்தை பற்றிய கேள்வி... ஆண்டு, தேதி, நேரத்துடன் பதில் அளித்தார்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம்.. முதலமைச்சர் வழங்கினார்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்