ராணா, நானி வீடுகளில் வருமான வரி சோதனை.. திரையுலகில் பரபரப்பு..

Income Tax raid at Actors Rana And Nani house

பாகுபலி, ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் படங்களிலும் நடித்தவர் ராணா. இவர் தற்போது தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்ட படத்தில் நடித்திருக்கிறார்.

ராணா வீடு ஐதராபாத்தில் உள்ளது. அவரது வீட்டில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது. அதுபோல் நடிகர்கள் வெங்கடேஷ், நானி வீடுகளிலும் சோதனை நடந்தது.
நடிகர் நானியை பொறுத்தவரை தமிழில் நான் ஈ, ஆஹா கல்யாணம் படங்களில் நடித்திருக்கிறார்.

ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. ஒரு படத்தில் நடிக்க நானி ரூ 10 கோடி சம்பளம் கேட்கும் இவர் வருடத்துக்கு 3 படங்களில் நடித்து 30 கோடி சம்பாதிக்கிறாராம். வருமான வரி சோதனையின் போது சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

வெங்கடேஷ் குடும்பத்தினருக்கு சொந்தமாக ஐதராபாத், விசாகப்பட்டினத்தில் உள்ள ராமா நாயுடு ஸ்டுடியோ மற்றும் பட அலுவலகம் போன்றவற்றிலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

You'r reading ராணா, நானி வீடுகளில் வருமான வரி சோதனை.. திரையுலகில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அழியாத கோலங்கள் 2ம் பாகம்  ரிலீஸ்.. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி போட்டி நடிப்பு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்